Watch Video: உக்ரைனில் பீரங்கியை தடுத்த தனி ஒருவன்.! மீண்டும் ஒரு Tank Man வரலாற்று சம்பவம்!
உக்ரைன் நாட்டில் ஒருவர் பீரங்கி வண்டிகள் முன்பாக செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.
உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையே போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பல இடங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் உக்ரைன் நாட்டிலுள்ள சில விமான நிலையங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் ரஷ்ய படைகள் செல்லும் பீரங்கி வண்டியை ஒருவர் தடுத்து நிறுத்தும் வகையில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரஷ்ய பீரங்கி வண்டிகள் செல்லும் வழியில் ஒருவர் நடுவே நின்று அதை தடுக்க முற்படுகிறார். அவரை சுற்றி அந்த வண்டிகள் செல்லும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Ukrainian tank man. 🇺🇦 pic.twitter.com/bAQLhJ1CWG
— Visegrád 24 🇨🇿🇭🇺🇵🇱🇸🇰 (@visegrad24) February 25, 2022
இந்த வீடியோவை பதிவிட்டு பலரும் டைனாமென் சதுகத்தில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு வருகின்றனர். ஏனென்றால் இதேபோன்று 1989ஆம் ஆண்டு ஒருவர் சீனாவில் பீரங்கி வண்டியை தடுத்து நிறுத்தினார். அதேபோன்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
1989ஆம் ஆண்டு சீனாவில் மாணவர்கள் சிலர் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தை நிறுத்த சீன அரசு துப்பாக்கிச்சூடு செய்தது. அதன்பின்னர் அந்த போராட்டாக்காரர்களை அப்புறப்படுத்த பீரங்கி வண்டியை பயன்படுத்தியது. அப்போது சீனாவின் டைனாமென் சதுக்கத்தில் வரிசையாக படை எடுத்த பீரங்கி வண்டிகளை ஒருவர் தனி நபராக கையில் பையுடன் நின்று தடுத்தார். அந்தச் சம்பவம் அப்போது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
அந்த நபரும் போராட்டத்தில் ஈடுபட்ட நபர் என்று தெரியவந்தது. எனினும் அவருடைய முழு விவரம் அப்போது சரியாக தெரியவில்லை. இருப்பினும் அந்தச் சம்பவம் ஒரு வரலாற்று நிகழ்வாக கருதப்பட்டது. அந்தச் சம்பவம் நடந்து 33 ஆண்டுகளுக்கு பிறகு அதேபோன்று ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதை பலரும் சுட்டிக்காட்டி பதிவுகளை செய்து வருகின்றனர். உக்ரைன் நாட்டில் மீண்டும் ஒரு 'Tank Man' என்ற வார்த்தையும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்