Watch Video| பால் மட்டும் இல்லை நான் தண்ணீரும் குடிப்பேன்...- கருப்பு நாக பாம்பின் வைரல் வீடியோ!
கருப்பு நாக பாம்பு ஒன்று தண்ணீர் குடிக்கும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எப்போதும் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக பாம்பு தொடர்பான வீடியோ என்றால் அது ஒரு வித அச்ச உணர்வுடன் வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு கருப்பு நாகம் இருக்கும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக ராயல் பைதான் என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் கருப்பு நாகப் பாம்பு ஒன்று கண்ணாடி கூண்டிற்குள் இருந்து வெளியே தலையை நீட்டுகிறது. அதன்பின்னர் ஒருவர் அங்கு ஒரு தண்ணீர் க்ளாஸை எடுத்து வருகிறார். அவர் கொண்டு வரும் தண்ணீரை பாம்பு அழகாக வாய் வைத்து குடிக்கிறது.
View this post on Instagram
இந்த வீடியோவை தற்போது வரை 1.25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த கருநாகம் தண்ணீரை அழகாக குடிக்கிறது என்று பலரும் தங்களுடைய கருத்தை பதிவிட்டி வருகின்றனர். மேலும் பலர் இந்த வீடியோவை ஷேர் செய்து கருநாகத்தின் சேட்டையை பாருங்கள் என்றும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:18-வது மாடியில் தலைகீழாக தொங்கிய பாட்டி.. லாவகமாக மீட்ட வீரர்கள்.. வைரல் வீடியோ