மேலும் அறிய

Trump Modi: மோடிக்கு புகழாரம்.. திடீரென போன் போட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன சங்கதி?

பிரதமர் மோடி மகத்தான பணியைச் செய்கிறார் என்று பாராட்டியதுடன், அவருக்கு தொலைபேசி மூலமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீதம் ஏற்றுமதி வரியை விதித்தது முதலே இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமான உறவில் ஏராளமான முரண்பாடுகள் உருவாகி வருகிறது. சுமார் 7.5 லட்சம் கோடி வர்த்தகம் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ட்ரம்ப்:

இந்திய பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பாஜக தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமின்றி உலகத் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் பிரதமர் மோடிக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து கூறினார்.

இதுதொடர்பாக, இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் எனது 75வது பிறந்தநாளுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து கூறியதற்கு மிக்க நன்றி எனது அருமை நண்பர் அதிபர் ட்ரம்ப். இந்தியா - அமெரிக்கா விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல நானும் உங்களைப் போல உறுதியாக உள்ளேன். உக்ரைன் மோதலுக்கு உறுதியான தீர்வு காணும் உங்கள் முயற்சிக்கு ஆதரவுகள் என்று பதிவிட்டுள்ளார்.

மோடி மகத்தான பணி:

அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தனது எக்ஸ் பக்கத்தில் எனது நண்பர் பிரதமர் மோடியுடன் அருமையான தொலைபேசி உரையாடல்.  நான் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினேன். அவர் மகத்தான பணியைச் செய்கிறார். ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் உங்கள் ஆதரவிற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். 

50 சதவீத வரி:

இவர்கள் இருவரின் இந்த இரு பதிவு இந்தியா - அமெரிக்க உறவில் சுமூகமான போக்கை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ஏனென்றால், இந்த வரி விதிப்பிற்கு பிறகு இரு நாடுகளின் உறவும் மிகவும் மோசமான சூழலுக்குச் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, வரி விதிப்பு தொடர்பாக இந்தியா தனது அதிருப்தியையும், வேண்டுகோளையும் மாறி, மாறி தெரிவித்த பிறகும் அமெரிக்கா வரியை 50 சதவீதமாக மாற்றிய பிறகு, ட்ரம்ப் மோடிக்கு 4 முறை அழைப்பு விடுத்தார். 

ஆனால், பிரதமர் மோடி அவரது அழைப்பை நிராகரித்தார். மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா - சீனா -ரஷ்யா உறவு மிகவும் வலுவாக இருந்தது அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. வழக்கமாக ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டும் இந்தியா இந்த வரி விதிப்பிற்கு பிறகு சீனாவுடனும் நெருக்கம் காட்டத் தொடங்கியது.

வரி குறையுமா?

இது அமெரிக்காவிற்கு பீதியை உண்டாக்கியது. இதன்பின்னர், மீண்டும் இந்திய உறவை சுமூகமாக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசியல் நிபுணர்கள் அமெரிக்க அரசை அறிவுறுத்தினர். இந்த நிலையிலே பிரதமர் மோடி - அதிபர் ட்ரம்ப் நேற்று போனில் பேசியுள்ளனர். இவர்களது பேச்சில் வரி விதிப்பு, ஏற்றுமதி விவகாரம் குறித்தும் பேசப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறையுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
Embed widget