‛நீ... 3 பீரை முழுசா குடிக்கிறவனா இருக்கலாம்... அதுக்காக 2 லிட்டர் சோடாவை 18 நொடியில் குடிக்க முடியாது’
ஸ்டீவன் ரூபெல் என்ற அமெரிக்க மனிதர் 1 லிட்டர் கிரேவியை வெறும் 38.22 வினாடிகளில் குடித்து இதே போன்று மற்றொரு சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் யாரும் நம்ப முடியாத வகையில் குறைவான நேரத்தில் இரண்டு லிட்டர் சோடாவை வெறும் 18.45 வினாடிகளில் குடித்து கின்னஸ் சாதனைப்படைத்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் “பேட்லேண்ட்ஸ்” புக்கர் (Eric “Badlands” Booker) என்பவர் BadlandsChugs என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். மேலும் ரேப் பாடகரான இவர் தனது சேனலில் அவ்வப்போது பாடல்களை அப்லோட் செய்து வருபவர். இதோடு மட்டுமின்றி எந்த இடங்களுக்கு சென்றாலும் அதுப்பற்றி Vlog போடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். தனது அதீத சாப்பாட்டு திறன் பற்றியும் ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக வீடியோ போடுவது போன்ற பன்முக திறன் கொண்டவராக விளங்கி வருகிறார்.
- இந்நிலையில் இவர், குளிர்பானங்கள் மீது தனக்கு உள்ள காதலை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சாதனை ஒன்றினை நிகழ்த்துவதற்கு முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து தான் அவர் 2 லிட்டர் சோடாவினை வாங்கி அதனை அளவு தெரியும் படியான ஜக்கில் ஊற்றி குடித்துள்ளார். இதனை அவரது மனைவி மற்றும் குழந்தைகளை வைத்து வீடியோ எடுத்து அதனை தனது சேனலில் அப்லோடு செய்துள்ளார். அந்த வீடியோவில் சோடாவின் சரியான அளவை அவர் அளந்து நமக்கு காட்டிய பிறகு, அவர் அதை தூக்கி ஒரே கல்ப்பாக சில நொடிகளில் முழுவதையும் உறிஞ்சி குடித்து விடுகிறார். வீடியோவில் காட்டப்படும் ஸ்டாப் வாட்ச் அவர் வெறும் 18.45 வினாடிகளில் முழு ஜாடி சோடாவையும் குடித்ததாக காட்டுகிறது. ஆன்லைனில் ஷேர் செய்யப்பட்டதிலிருந்து இந்த வீடியோ 1.5 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களுடன், 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை யூடியூபில் பெற்றுள்ளது. ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பினைப்பெற்ற நிலையில், இந்த வீடியோவினை கின்னஸ் சாதனைக்குழுவினர் இதன் உண்மைதன்மையினை ஆராய்ந்தனர். அதில் அனைத்தும் உண்மை தான் என கண்டறியப்பட்ட நிலையில், இவரின் இச்சாதனை கின்னஸ் சாதனைப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. பின்னர் கின்னஸ் உலக சாதனையின் (Guinness World Record) அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டது. இந்த சாதனை வீடியோவினைக்கண்ட ரசிகர்கள் மற்றும் அவரது சேனலின் சப்ஸ்கிரைபர்கள் எரிக்கின் உலக சாதனைக்கு வாழ்த்துக்களை மழைப்போல் தெரிவித்து வருகின்றனர்.
இதேப்போன்று அடிக்கடி தனது யூடியூப் சேனலான BadlandsChugs-ல் துரித உணவு சாப்பிடும் திறன் மற்றும் பானங்களை வேகமாக குடித்து முடிக்கும் திறன்களின் வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டாலும், அவருக்கு rap இசை மீதும் ஆர்வம் உண்டென்பதால், இதுவரை 9 rap வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இதனிடையே அசாதாரண சாப்பிடும் திறனை ஒருவர் சாதனையாக்குவது இது முதல் முறை அல்ல. இதுவரை வித்தியாசமான சாதனைப் படைத்தவர்களின் பட்டியல் மிக நீளமாக உள்ளது. உதாரணமாக ஸ்டீவன் ரூபெல் என்ற அமெரிக்க மனிதர் 1 லிட்டர் கிரேவியை வெறும் 38.22 வினாடிகளில் குடித்து இதே போன்று மற்றொரு சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.