Pope Leo XIV: புதிய போப் ஆண்டவர் தேர்வு! யார் இவர்? புது போப்பின் புதிய பெயர் இதுதான்!
புதிய போப் ஆண்டவராக அமெரிக்காவைச் சேர்ந்த கார்டினல் ராபர்ட் ஃப்ரான்ஸிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் இயேசுவின் சீடராக கருதப்படுபவர் போப். கடந்த மாதம் 21ம் தேதி போப் காலமானதைத் தொடர்ந்து புதிய போப்பை தேர்வு செய்யும் வழக்கம் தொடங்கியது. ரோம் நகரில் உள்ள வாடிகனில் போப்பை தேர்வு செய்ய கார்டினல்கள் அனைவரும் கூடிய நிலையில் புதிய போப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிய போப் தேர்வு
தேவாலயத்தில் புகைக்கூண்டில் இருந்து வெண்புகை வெளியேறியதை அடுத்து புதிய போப் தேர்வு செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய போப்பாக கார்டினல் ராபர்ட் ஃப்ரான்ஸிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 267வது போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ள இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.
புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ள ராபர்ட் ஃப்ரான்ஸிசுக்கு 69 வயதாகிறது. ஒவ்வொரு முறையும் போப் புதியதாக தேர்வு செய்யப்படும் போது அவருக்கு புதிய பெயர் சூட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் புதியதாக தேர்வாகியுள்ள போப் ஆண்டவருக்கு 16ம் லியோ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
1.6 பில்லியன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வழிகாட்டியாக தேர்வாகியுள்ள புதிய போப் வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இருந்து போப்பாக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக மக்கள் மத்தியில் உங்கள் அனைவருக்கும் அமைதி கிட்டட்டும் என்று போதித்தார். உக்ரைன் ரஷ்யா போர், இஸ்ரேல் ஹமாஸ் போர், இந்தியா - பாகிஸ்தான் மோதல் ஏற்பட்டுள்ள சூழலில் போப் அமைதி கிட்டட்டும் என்று போதித்திருப்பது மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
யார் இவர்?
அமெரிக்காவைப் பூர்வீகமாக கொண்ட இவர் தென் அமெரிக்காவில் பல இடங்களில் கிறிஸ்தவ திருப்பணியைச் செய்துள்ளார். ட்ருஜிலோ, பெரு, சிக்லயோ, பெருவியன் சிட்டி உள்ளிட்ட இடங்களில் கிறிஸ்தவ திருப்பணி செய்துள்ளார். பெரு நாட்டில் இவருக்கு குடியுரிமை உள்ளது.





















