மேலும் அறிய

US Visa Restrictions: குண்டா இருக்கீங்களா.? அப்போ இனிமே அமெரிக்கா போறது கஷ்டம்தான்; விசாவுக்கு புதிய கட்டுப்பாடுகள்

அமெரிக்கா செல்ல விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கான பரிசோதனைகளில் பலவற்றை சேர்த்துள்ளது அந்நாட்டு அரசு. இதன் மூலம், உடல் பருமனாக இருப்பவர்கள், நீரிழிவு நோய் இருப்பவர்கள் இனி அங்கு செல்வது கடினமாகிறது.

அமெரிக்கா செல்வதற்கான விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, தொற்று நோய்களுக்கான பரிசோதனை, தடுப்பூசி வரலாறு, தொற்று நோய்கள் மற்றும் மனநல நிலைமைகள் ஆகியவற்றைச் சரிபார்ப்பது எப்போதும் விசா விண்ணப்ப செயல்முறையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது புதிய மருத்துவ பரிசோதனைகள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, இனி குண்டாக இருப்பவர்கள், நீரிழிவு, இதய நோய் இருப்பவர்கள் அமெரிக்கா செல்வது கடினமாக இருக்கும் என கருதப்படுகிறது.

அமெரிக்க விசாவிற்கு புதிய கட்டுப்பாடுகள்

அமெரிக்கவின் அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றபின், குடியேற்ற நடைமுறைகளில்  கடும் கெடுபிடிகளை காட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் 'ஹெச்-1பி' விசாவுக்கான கட்டணத்தை வரலாறு காணாத வகையில் ஒரு லட்சம் டாலராக உயர்த்தி பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். இந்நிலையில், அடுத்ததாக தற்போது, அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு, விரிவான உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ளும்படி, வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, அமெரிக்க விசாவுக்கு வெளிநாட்டினர் விண்ணப்பிக்கும்போது, விரிவான உடல் பரிசோதனையை மேற்கொள்ளும்படி, அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, விசா பெறுவது மேலும் கடினமாகி உள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை, தன் துாதரகங்கள் மற்றும் துணை துாதரகங்களுக்கு அனுப்பியுள்ள ரகசிய சுற்றறிக்கையில், 'விசா கோரும் விண்ணப்பங்களை அதிகாரிகள் மதிப்பிடும் போது, விண்ணப்பதாரரிடம் மிகவும் விரிவான உடல்நலப் பரிசோதனை மேற்கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மருத்துவ பரிசோதனைகள் என்னென்ன.?

அமெரிக்காவில் வசிக்க விசாவிற்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு நீரிழிவு நோய் அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், அவர்கள் நிராகரிக்கப்படலாம் என்று டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட அரசாங்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவின்படி, இதயம், சுவாசம், புற்று நோய், நீரிழிவு, வளர்சிதை மாற்றம், நரம்பியல் மற்றும் மனநலம் உள்ளிட்ட நோய் பாதிப்பு உள்ளவர்கள், மருத்துவ சிகிச்சைக்கு தேவையான பணத்தை செலவழிக்கக் கூடியவர்களா என்பதை விசா அதிகாரிகள் மதிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர் அரசின் உதவியை நாடமாட்டார் அல்லது அரசு செலவில் நீண்ட கால மருத்துவ பராமரிப்புக்கு செல்லமாட்டார் என்பதை உறுதி செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த புதிய நடைமுறையின்படி, உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் பாதிக்கப்பட்டோரின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மேலும், விண்ணப்பங்களைத் தவிர, குழந்தைகள் அல்லது வயதான பெற்றோர் போன்ற குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையை விசா அதிகாரிகள் மதிப்பிட வேண்டும் என்றும் வழிகாட்டுதல் கூறுகிறது. "சார்ந்திருப்பவர்களில் யாருக்காவது குறைபாடுகள், நாள்பட்ட மருத்துவ நிலைமைகள் அல்லது பிற சிறப்புத் தேவைகள் உள்ளதா, மேலும் விண்ணப்பதாரர் வேலைவாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு கவனிப்பு தேவையா?" என்றும் ஆராயப்படுகிறது.

இத்தகைய கடும் கட்டுப்பாடுகளால், இனி அமெரிக்கா செல்லும் வெளிநாட்டினர், அவ்வளவு எளிதில் விசா பெற முடியாது என்பது தெளிவாகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
Electric Car Sales: EV கார்களுக்கு என்னாச்சு? சரிந்த விற்பனை, தடுமாறும் டாடா, MG, மஹிந்த்ரா - ஹிட் லிஸ்டில் கியா
Electric Car Sales: EV கார்களுக்கு என்னாச்சு? சரிந்த விற்பனை, தடுமாறும் டாடா, MG, மஹிந்த்ரா - ஹிட் லிஸ்டில் கியா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
Electric Car Sales: EV கார்களுக்கு என்னாச்சு? சரிந்த விற்பனை, தடுமாறும் டாடா, MG, மஹிந்த்ரா - ஹிட் லிஸ்டில் கியா
Electric Car Sales: EV கார்களுக்கு என்னாச்சு? சரிந்த விற்பனை, தடுமாறும் டாடா, MG, மஹிந்த்ரா - ஹிட் லிஸ்டில் கியா
IPL 2026 Auction: மேட்ச் வின்னர்களை கேட்கும் ஐபிஎல் அணிகள், கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள் யார்? டாப் லிஸ்ட்
IPL 2026 Auction: மேட்ச் வின்னர்களை கேட்கும் ஐபிஎல் அணிகள், கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள் யார்? டாப் லிஸ்ட்
Top 10 News Headlines:  811 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர், விமான நிலையங்கள் மூடல், ரோ-கோ ஷோ? - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: 811 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர், விமான நிலையங்கள் மூடல், ரோ-கோ ஷோ? - 11 மணி வரை இன்று
வாடகை வீட்டில் குடியேறீங்களா.! மாத வாடகை, அட்வான்ஸ் எவ்வளவு கொடுக்கனும்- வெளியான குஷியான விதிமுறைகள்
வாடகை வீட்டில் குடியேறீங்களா.! மாத வாடகை, அட்வான்ஸ் எவ்வளவு கொடுக்கனும்- வெளியான குஷியான விதிமுறைகள்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget