UN Blames Israel: காசாவில் நடப்பது இனப்படுகொலை; பகீர் கிளப்பிய ஐ.நா விசாரணை கமிஷன் - இஸ்ரேலின் பதில் என்ன.?
காசாவில் இனப்படுகொலை நடப்பதாக ஐ.நா-வின் விசாரணை கமிஷன் அறிக்கை தெரிவிக்கும் நிலையில், அதற்கு இஸ்ரேல் என்ன பதில் கொடுத்துள்ளது தெரியுமா.? அதை தற்போது பார்க்கலாம்.

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளதாக ஐ.நா விசாரணைக் கமிஷனின் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் இதை மறுத்துள்ள இஸ்ரேல், பதில் அறிக்கைவை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.
ஐ.நா விசாரணை கமிஷன் அறிக்கை
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு, ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது, 251 பேரை பிணைக் கைதிகளாக அவர்கள் பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதி மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.
இந்த போர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் நியில், போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
மறுபுறம், காகாவில் பசி, பட்டினியால் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். அங்கு பஞ்சம் நிலவுவதாக சமீபத்தில் ஐ.நா அறிவித்தது.
இப்படிப்பட்ட சூழலில், காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலையை அரங்கேற்றுவதாக, ஐ.நா-வின் விசாரணை கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐ.நா அறிக்கைக்கு இஸ்ரேலின் பதில் என்ன.?
ஐ.நா-வின் இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா-விற்கான இஸ்ரேல் தூதர் டேனியல் மெரோன், இந்த அறிக்கை போலியானது என்றும், ஹமாஸ் படையினரால் எழுதப்பட்டது, அவர்கள் பொய்யான அவதூறுகளை பரப்புகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலில் இனப்படுகொலைக்கு முயன்றது ஹமாஸ் தான் என்றும், 1,200 பேரைக் ஹமாஸ் கொன்றது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு குடும்பங்களை அவர்கள் உயிருடன் எரித்ததாகவும், ஒவ்வொரு யூதரையும் கொல்லும் இலக்கை ஹமாஸ் படையினர் வெளிப்படையாக அறிவித்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, வேறு எந்த நாடும் இந்த நிலைமைகளில் செயல்பட்டு, போர்க்களத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் தீங்குகளை தடுக்க இவ்வளவு செய்ததில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது. அதனால், இந்த அறிக்கை ஆதாரமற்றது என்றும், இஸ்ரேல் தனது மக்களை பாதுகாத்து, பிணைக் கைதிகளை பத்திரமாக மீட்டு வர முயற்சி செய்துவருகிறது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், யூத அரசை குறை கூறுவதிலும், ஹமாஸின் அட்டூழியங்களை மூடி மறைப்பதிலும், பதிக்கப்பட்டவர்களை குற்றம் சாட்டப்பட்டவர்களாக மாற்றுவதையும் ஐ.நா விசாரணை கமிஷன் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஐ.நா-வை தங்கள் அறிக்கை மூலமாக குற்றம்சாட்டியுள்ளது இஸ்ரேல்.




















