Elon Musk: நீங்கள் இல்லையென்றால் வேறு யாரு? எங்களுக்கு...- எலான் மஸ்கிடம் கோரிக்கை வைத்த உக்ரைன் நபர்
உக்ரைன் நாட்டில் இருந்து ஒருவர் எலான் மஸ்கிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த 3 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் மரியபோல் நகரிலுள்ள எஃகு ஆலை மீது தற்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்தத் தாக்குதலில் சிக்கியுள்ள உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தங்களை காப்பாற்றுங்கள் என்று ஒரு கோரிக்கையை எலான் மஸ்கிற்கு வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எலான் மஸ்க் நீங்கள் வேற்று கிரகத்தில் இருந்து எப்போதும் யாரும் செய்ய முடியாததை செய்ய முடியும் என்று காட்டுபவர். நாங்கள் யாருமே தற்போது வசிக்க முடியாத ஒரு இடத்தில் வசித்து வருகிறோம். எங்களை எப்படியாவது அசோவஸ்டல் பகுதியிலிருந்து வெளியேற உதவுங்கள். நீங்கள் இல்லை என்றால் வேறு யாரு? எங்களுக்கு உதவுவார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
@elonmusk people say you come from another planet to teach people to believe in the impossible.
— Сергій Волина (@Serjvlk) May 11, 2022
Our planets are next to each other, as I live where it is nearly impossible to survive.
Help us get out of Azovstal to a mediating country. If not you, then who? Give me a hint.
அவரின் இந்த ட்விட்டர் பதிவு வேகமாக வைரலாகி வருகிறது. இந்தப் பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உக்ரைன் நாட்டின் மரியபோல் நகரிலுள்ள எஃகு ஆலையில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதில் சிலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் சுமார் 1000 உக்ரைன் படை வீரர்கள் சிக்கியுள்ளதாகும் தகவல் கிடைத்துள்ளது. உக்ரைன் -ரஷ்யா இடையே நிலவி வரும் போரை நிறுத்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றன. எனினும் தற்போது வரை இந்தப் போர் முடிவிற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்