KFC Hot Wings | ஆர்டர் செய்தது சிக்கன் விங்ஸ்.. வந்தது தலை.. KFC-இல் நடந்த களேபரம்..
கேஎஃப்சியில் பெண் ஒருவர் சிக்கன் ஆர்டர் செய்தபோது அவருக்கு வந்த உணவு பார்சலில் தலைப்பகுதி இருந்தது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் மிகவும் பிரபலமான உணவு நிறுவனங்களில் ஒன்று கேஎஃப்சி. இந்த உணவகத்திலிருந்து பலரும் மிகவும் விரும்பி சிக்கன் வாங்கி சாப்பிடுவது வழக்கம். குறிப்பாக சிக்கன் விங்க்ஸ், சிக்கன் பெர்கர் ஆகியவை வாங்கி சாப்பிட்டு மகிழ்வார்கள். அந்தவகையில் பெண் ஒருவர் கேஎஃப்சியிலிருந்து வழக்கம் போல் சிக்கன் விங்ஸை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அது என்ன?
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் கேஎஃப்சியில் இருந்து ஒரு சிக்கன் ஹாட் விங்ஸ் மீலை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு ஒரு பார்சல் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதில் வறுக்கப்பட்ட சிக்கன் தலை துண்டு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்தப் பெண் இதை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் இந்த உணவிற்கு 2 ஸ்டார் ரிவ்யூ ரேட்டிங்கையும் கொடுத்துள்ளார். அவரின் இந்தப் பதிவிற்கு கேஎஃசி சார்பில் பதில் பதிவு ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதில், “நாங்கள் எப்போதும் தரமான சிக்கன் துண்டுகளை வழங்குவதுதான் எங்களுடைய நோக்கம். அதற்காக எங்களுடைய அனைத்து இடங்களிலும் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இரு சில இடங்களில் இந்த பரிசோதனையையும்தாண்டி இதுபோன்ற தவறுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நபருக்கு வந்த சிக்கன் துண்டு எங்களையே மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தவறுக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.
Ahem 🗣️ pic.twitter.com/dM0xi1WLf9
— KFC UK (@KFC_UKI) December 22, 2021
அத்துடன் அந்த நபரை தொடர்புகொண்டு அவரிடம் மன்னிபும் கேட்டுள்ளோம். அவருக்கு எங்களுடயை தரப்பில் இருந்து சிறப்பு சலுகையையும் அளித்துள்ளோம். மேலும் அவர் தன்னுடைய குடும்பத்துடன் வந்து எங்களுடைய சமையல் அறையை பார்வையிடவும் நாங்கள் அனுமதி அளித்துள்ளோம். அப்போது தான் அவர் அடுத்து முறை தைரியமாக எங்களுடைய கடையில் வந்து சாப்பிட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் மீண்டும் எங்களுடைய உணவை சாப்பிட்டு 5 ஸ்டார் ரேட்டிங் ரிவ்யூவை தருவார் என்று ஆவலுடன் காத்திருக்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஒமிக்ரானை எதிர்கொள்ள நான்கு தடுப்பூசிகள்: இஸ்ரேல் எடுத்த முடிவு!