Wheat Export : இந்திய கோதுமையை ஏற்றுமதி செய்ய தடைவிதித்த அமீரகம்.. பரபரப்பு காரணம் இதுதான்..
இந்திய கோதுமையை ஏற்றுமதி செய்ய விரும்பும் நிறுவனங்கள், UAE அமைச்சகத்திடம் முதலில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கோதுமையை ஏற்றுமதி செய்ய நான்கு மாதங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது. உலகின் இரண்டாவது பெரிய தானிய உற்பத்தியாளராக இந்தியா இருந்து வருகிறது.
உலகளாவிய வர்த்தக ஓட்டத்தில் தடை ஏற்பட்டிருப்பதை மேற்கோள் காட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதித்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உள்ளூர் பயன்பாட்டிற்காக கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி வழங்கியிருந்தது.
UAE suspends export of Indian wheat for next four months, says reporthttps://t.co/Y4pHxR6Qt0
— ThePrintIndia (@ThePrintIndia) June 15, 2022
கடந்த மே 14ஆம் தேதி, கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்தது. ஏற்கனவே, கோதுமை வழங்கப்படும் என உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்த நாடுகளுக்கும் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய கோரும் நாடுகளுக்கும் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அப்போதிலிருந்து இதுவரை, 4 லட்சத்து 46 ஆயிரத்து 202 டன் கோதுமைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?
மே 13ஆம் தேதிக்குள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்திய கோதுமையை ஏற்றுமதி செய்ய விரும்பும் நிறுவனங்கள் நிதித்துறை அமைச்சகத்திடம் முதலில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகமும் இந்தியாவும் பிப்ரவரியில் ஒரு பரந்த வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் மூலம், ஒருவருக்கொருவர் மற்ற நாட்டின் பொருட்கள் மீது விதித்துள்ள அனைத்து கட்டணங்களும் குறைக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் தங்கள் வருடாந்திர வர்த்தகத்தை 100 பில்லியன் டாலர்களாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதையும் படிக்க: IND vs SA, 1st T20 : எனக்கு இது முன்னவே தெரியும்; அதுதான் ட்விட்ஸ்ட்! - இந்தியாவுடனான வெற்றி குறித்து வான்டர் டுசன்
விரிவான பொருளாதார கூட்டாண்மை வர்த்தக ஒப்பந்தம் என்ற இந்த ஒப்பந்தம் மே 1ஆம் தேதி அமலுக்கு வந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்