‛எனக்கு வேற வழி தெரியல ஆத்தா...’ கடலில் இறங்கி உரையாற்றிய அமைச்சர்!
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. தங்கள் நாடு காலநிலை மாற்றத்தால் சந்தித்துள்ள சிக்கல் குறித்து உணர்த்த இந்த முயற்சியாம்.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றிய துவாலு நாட்டின் அமைச்சர், தங்கள் நாடு காலநிலை மாற்றத்தால் சந்தித்துள்ள சிக்கல் குறித்து உணர்த்தும் வகையில் கடலில் நின்று உரையாற்றினார்.
துவாலு (Tuvalu) என்பது பசிபிக் கடலில் ஹவாய்க்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நடுவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது முன்னர் எலீஸ் தீவுகள் என அழைக்கப்பட்டது. இதன் அண்டை நாடுகளாக கிரிபட்டி, சமோவா மற்றும் ஃபிஜி தீவுகள் ஆகியன அமைந்துள்ளன. துவாலுவில் மொத்தம் நான்கு தீவுகள் உள்ளன. இந்த நாட்டின் மொத்தப் பரப்பளவு 26 சதுர கிமீ ஆகும். இத்தாலியின் வாட்டிக்கனை அடுத்து உலகின் இரண்டாவது மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும். ஐ.நா. சபையில் உறுப்புரிமை கொண்ட மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடு. உலகின் நான்காவது மிகச்சிறிய நாடு. இந்நாட்டின் பூர்வகுடிகள் பாலினேசியர்கள்.
இந்நிலையில், துவாலு நாட்டின் அமைச்சர், தங்கள் நாடு காலநிலை மாற்றத்தால் சந்தித்துள்ள சிக்கல் குறித்து உணர்த்தும் வகையில் கடலில் நின்று உரையாற்றி சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளார்.
துவாலு நாட்டு அமைச்சர் சைமன் கோஃப் கடலில் இருந்து தனது கிளாஸ்கோ மாநாட்டு உரையை வாசித்தார். இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி சைமன் கோஃப, பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அதிமுக்கியமானவை.
சைமன் கோஃப் தனது உரையில், "இந்த கிளாஸ்கோ மாநாட்டின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள காலநிலை மாற்றம் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவற்றால் துவாலு நேரடியாகவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை உணர்த்தவே நான் தண்ணீரில் இறங்கி நின்று பேசிக் கொண்டிருக்கிறேன். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க நாங்கள் பல்வேறு துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். உலக நாடுகளும் இந்த விவகாரத்தில் எங்களுடன் கைகோர்க்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
Can we start respecting our planet, please? #COP26 https://t.co/myZHoS1CJx
— 🌺Biden is our President!🇵🇷🌊✊🏽 (@islamia_cm) November 9, 2021
காலநிலை மாற்ற மாநாடு ஏன் அவசியம்?
பருவநிலை மாற்றத்துக்கான ஐ.நா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளின் உச்சிமாநாடு சிஓபி 26. இந்த, பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா-வின் பாரீஸ் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. பாரீஸ் உடன்படிக்கையின் கீழ் பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா கட்டமைப்பு மாநாட்டில் குறிப்பிடப்பட்ட 8 இலக்குகளை 2021 முதல் 2030-க்குள் அடைவதற்கான உறுதி அறிக்கையை இந்தியா சமர்ப்பித்தது.
இதன்படி 2005-ல் இருந்த மாசு அளவை விட, 2030ம் ஆண்டுக்குள், உள்நாட்டு மொத்த உற்பத்தி மூலம் ஏற்படும் மாசு அளவை 33 முதல் 35 சதவீதம் குறைக்க, இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும் 40 சதவீத மின்சாரத்தை, படிமம் அல்லாத எரிபொருளில் இருந்து தயாரிக்கவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச அரசாங்கக் குழுவின் (ஐபிசிசி) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வரும் ஆண்டுளில், இதே வழக்கமான நடைமுறைகளை உலக நாடுகள் பின்பற்றுமானால் புவி வெப்பமடைதல் 1.5 டிகிரி மற்றும் 2 டிகிரி செல்சியஸ் அளவை கட்டாயம் தாண்டும் என்று COP-26 தெரிவித்தது.