Trump: ரஷ்யாவுக்கும் வரி விதிக்க போறேன்- சுயரூபத்தை காட்டும் டிரம்ப்.. இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே.!
Trump- Russia: டிரம்ப்புக்கும், புதினுக்கும் இடையிலான உறவானது சுமூகமாக செல்கிறது என கூறப்பட்டும் நிலையில், திடீரென ரஷ்யாவுக்கு எதிராக வரி விதிக்க போவதாக் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கனடா, மெக்சிகோ, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக வரி விதிக்கும் போக்கை எடுத்து வரும் நிலையில், திடீரென ரஷ்யாவுக்கு எதிராக வரி விதிக்க போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். புதினிடம் நெருக்கம் காட்டிவந்த டிரம்ப், எதற்காக வரி விதிக்க போவதாக தெரிவித்திருக்கிறார், மனமாற்றத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
அதிரடி காட்டும் டிரம்ப்:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றவுடனே, அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார். அமெரிக்காவில் சட்டப்பூர்மற்று குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார். ஹமாஸ்-இஸ்ரேல் போரை நிறுத்துப்போவதாகவும் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டு வருவேன் என்றும் தெரிவித்தார். ஹமாஸ்-இஸ்ரேல் போரை நிறுத்த முதற்கட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்திய நிலையில், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்துவதாக கூறி கனடா, மெக்சிகோ, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும் தெரிவித்தார். மேலும், அமெரிக்காவுக்கு எதிராக அதிகமான வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக , அமெரிக்காவும் அதிக வரி விதிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
கோபத்தில் சீனா
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கனடா, சீனா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு எதிராக, இறக்குமதி வரிகளை அதிகரிப்பு செய்து உத்தரவு பிறப்பித்தார். இதற்கு பதிலடியாக , அமெரிக்க பொருட்களுக்கு எதிராகவும், அதிக வரி விதிக்க போவதாக சீனா தெரிவித்தது. இதனால், வர்த்தக போர் சூழும் நிலை ஏற்படக் கூடும் எனவும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக ரஷ்யா-உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தலையிட்டு வருகிறது. அமெரிக்காவுக்கு மிகவும் எதிரியாக பார்க்கப்பட்டு வந்து ரஷ்யா, டிரம்ப்பின் முதல் தொலைபேசி உரையாடலில் மூலம், உற்ற நண்பர்கள் போல மாறினர், டிரம்ப்பும் புதினும். இது உலக அரசியலையே ஆச்சர்யபடுத்தியது மட்டுமன்றி, உக்ரைனுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரஷ்யா-உக்ரைன் போர்:
இதையடுத்து உக்ரைன் ஆதரவை தவிர்த்து, ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் போக்கில் , அமெரிக்கா செல்ல ஆரம்பித்தது. போர் நிறுத்த பேச்சுவார்த்தையில்கூட ரஷ்யாவிடம் மட்டுமே அமெரிக்க பேச்சுவார்த்தை நடத்தி, உக்ரைனை ஏளனம் செய்தது. சமீபத்தில், அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, அதிபர் டிரம்ப்பும், துணை அதிபர் வான்சும் சிறுமைப்படுத்தும் வகையிலும் மிரட்டும் தொணியிலும் பேசினர்.
இதையடுத்து, கோபத்துடன் அமெரிக்காவை விட்டு ஜெலன்ஸ்கி சென்றாலும், அமெரிக்காவிடம் பணிந்து, டிரம்ப்பிற்கு கடிதம் எழுதினார். அதில், அமெரிக்காவின் கனிம வள ஒப்பந்தத்திற்கு அனுமதி தர தயார் எனவும் கூறியிருந்தார். இதை டிரம்ப் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
”ரஷ்யாவுக்கு எதிராக வரி விதிக்க போகிறேன்”
இந்நிலையில், உக்ரைன் ரஷ்யா இடையிலான போரை நிறுத்த உடனடியாக பேச்சுவார்த்தை வாருங்கள். உக்ரைன் மீது ரஷ்யா மோசமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், ரஷ்யா மீது வரி விதிப்புகளையும், பொருளாதார தடைகளையும் விதிக்க திட்டமிட்டு வருகிறேன். அமைதி ஏற்படும் வரை, இந்த தடைகளை விதிக்க திட்டமிட்டு இருக்கிறேன் எனவும் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். ரஷ்யாவுக்கு ஆதராவாக செயல்பட்டு வந்த டிரம்ப், திடீரென எதிரான போக்குடன் செயல்படுவது, டிரம்ப்பின் செயல்பாடானது, பலரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.





















