மேலும் அறிய

Trump on Nuclear Attack: ஈரான் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்துமா அமெரிக்கா.? ட்ரம்ப் கூறிய பதில் என்ன தெரியுமா.? பாருங்க

ஈரான் மீது அணு ஆயுதம் பயன்படுத்தப்படுமா என்ற முக்கியமான கேள்விக்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிலளித்துள்ளார். அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா.? பார்க்கலாம்.

அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் போரில், தற்போது போர்நிறுத்தம் அமலில் உள்ளது. ஒருபுறம் பேச்சுவார்த்தை மூலம் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், ஈரானை மிரட்டுவதை ட்ரம்ப் நிறுத்தவில்லை. போர்நிறுத்தத்தை நீட்டித்தாலும், காலம் கடந்துகொண்டிருக்கிறது என ட்ரம்ப் கூறுகிறார். இப்படிப்பட்ட சூழலில், ஈரான் மீது அமெரிக்கா அணு ஆயுதத்தை பயன்படுத்துமா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். அது என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

“ஒப்பந்தம் செய்யவில்லை என்றால் ராணுவ ரீதியாக முடிப்பேன்“

செய்தியாளர்களுக்கு நேற்று சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துவரும் போதிலும், போரை முடிவுக்கு கொண்டுவர அவசரப்பட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். தான் மிகச் சிறந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாகவும், தன்னால் உடனடியாக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியும், ஆனால் அவ்வாறு செய்ய விரும்பவில்லை என கூறியுள்ள ட்ரம்ப், அந்த ஒப்பந்தம் என்றும் நிலைத்திருக்கும் வகையில் இருக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

ஆனால், ஈரானுக்கு காலம் கடந்து கொண்டிருப்பதாகவும், முதல் நான்கு வாரங்களில் ஈரானை ராணுவ ரீதியாக வென்று விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது அமைதி காத்து, ஈரான் என்ன ஒப்பந்தம் செய்கிறது என்று பார்ப்பதாகவும், அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்பவில்லை என்றால், அதை ராணுவ ரீதியில செய்து முடிப்பேன் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

“அணு ஆயுதத்தை பயன்படுத்த மாட்டேன்“

தொடர்ந்து, ஈரான் மீது அணு ஆயுத பயன்பாடு இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்ததோடு, அணு ஆயுதங்களை எந்த ஒரு நாடும் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

மேலும், அணு ஆயுதம் இல்லாமலேயே, சாதாரண ஆயுதங்களைக் கொண்டே ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படைகளை ஏற்கனவே அமெரிக்கா அழித்துவிட்டாகவும், அவ்வாறு இருக்கையில், அணு ஆயுதத்தை தான் ஏன் பயன்படுத்த வேண்டும் என்றும் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

போர்நிறுத்த காலத்தை பயன்படுத்தி, ஈரான் தனது ஆயுத கிடங்குகளை மீண்டும் நிரப்பியிருக்கக் கூடும் என்று கூறியுள்ள ட்ரம்ப், அப்படி அவர்கள் ஆயுதங்களை திரட்ட முயன்றால், அவற்றை ஒரே நாளில் அழித்துவிடும் திறன் தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது ஈரானின் தலைமை குழப்பத்தில் இருப்பதாகவும், தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ள ட்ரம்ப், வரும் நாட்களில் ஈரான் மீதான அழுத்தம் இன்னும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

தலைப்பு செய்திகள்

US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Embed widget