TIKTOK Ban: ”நான் தான் இருக்கேன்ல”.. ட்ரம்ப் போட்ட உத்தரவு, 17 கோடி அமெரிக்கர்கள் ஹாப்பி - என்ன நடந்துச்சு?
TIKTOK Ban: டொனால்ட் ட்ரம்ப் கொடுத்த வாக்குறுதியை தொடர்ந்து, அமெரிக்காவில் டிக்டாக் செயலி மீண்டும் தனது சேவையை தொடங்கியுள்ளது.

TIKTOK Ban: டிக்டாக் செயலி மீண்டும் செயல்பாட்டிற்கு வந்ததால், 17 கோடி அமெரிக்க பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீண்டும் வந்த ”டிக்டாக்” செயலி
டிக்டாக் செயலியை தடை செய்யும் அமெரிக்க அரசின் சட்டத்தை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுத் செய்ததை தொடர்ந்து, நேற்று அந்த செயலில் தனது செயல்பாட்டை நிறுத்தியது. இதனால், அமெரிக்காவில் அந்த செயலியை பயன்படுத்தி வந்த 17 கோடி பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பல திரைப்பட மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களும், டிக்டாக் செயலி தடைக்கு வேதனை தெரிவித்தனர். இந்நிலையில், சேவையை நிறுத்தி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையிலேயே, டிக்டாக் செயலி மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. ட்ரம்ப் கொடுத்த வாக்குறுதியால் டிக்டாக் செயலி மீண்டும் செயல்பாட்டிற்கு வந்திருப்பது, பயனாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப் கொடுத்த வாக்குறுதி என்ன?
டிக்டாக் தடை தொடர்பாக ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “டிக்டாக் இருட்டாக இருக்க வேண்டாம் என்று நிறுவனங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். சட்டத்தின் தடைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன் கால அவகாசத்தை நீட்டிக்க திங்கட்கிழமை ஒரு நிர்வாக உத்தரவை வெளியிடுவேன். இதனால் நமது தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது கூட்டு முயற்சியில் 50% வணிகத்தை அமெரிக்கா கட்டுப்படுத்துவதைப் பார்க்க விரும்புவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதன்படி, அமெரிக்க அதிபராக பதவியேற்கும் முதல் நாளிலேயே, டிக்டாக் தடைக்கு எதிரான ஆவணத்தில் ட்ரம்ப் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
STATEMENT FROM TIKTOK:
— TikTok Policy (@TikTokPolicy) January 19, 2025
In agreement with our service providers, TikTok is in the process of restoring service. We thank President Trump for providing the necessary clarity and assurance to our service providers that they will face no penalties providing TikTok to over 170…
டிக்டாக் வெளியிட்ட அறிக்கை
ட்ரம்பின் வாக்குறுதியை தொடர்ந்து டிக்டாக் செயலி சார்பாக வெளியான அறிக்கையில், “170 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கு TikTok வழங்கும் சேவை மற்றும் 7 மில்லியனுக்கும் அதிகமான சிறு வணிகங்களை செழிக்க ஆதரித்த எங்கள் சேவை தொடர தேவையான தெளிவு மற்றும் உத்தரவாதத்தை வழங்கிய அதிபர் டிரம்ப் அவர்களுக்கு நன்றி. இது முதல் திருத்தத்திற்கான வலுவான நிலைப்பாடு மற்றும் தன்னிச்சையான தணிக்கைக்கு எதிரானது. அமெரிக்காவில் TikTok ஐ வைத்திருக்கும் நீண்ட கால தீர்வில் நாங்கள் அதிபர் ட்ரம்புடன் இணைந்து பணியாற்றுவோம்” என தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

