400 ஆண்டுகளுக்கு பின் குடியரசு நாடான பார்படாஸ் தீவு... அடிமை விலங்கு உடைந்தது!
கடந்த 1996 ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற பார்படாஸ் தீவு தற்போது தான் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'லிட்டில் இங்கிலாந்து' என்று அழைக்கப்படும் பார்படாஸ் கரீபியன் தீவு கடந்த 1996 ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது. அதன்பிறகு பார்படாஸ் தீவு சுதந்திரம் அடைந்தாலும் கடந்த மாதம் வரை அதன் தலைவராக 2 ம் எலிசபத் தலைவராக இருந்து வந்தார்.
சுமார் 3 லட்சம் பேர் வசிக்கும் அந்த குட்டி தீவு மிகவும் செல்வச்செழிப்பு மிக்க நாடாகவே இன்றளவும் காணப்பட்டு வருகிறது. இந்தியா போன்றே 400 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து காலடி ஆதிக்கம் பார்படாஸ் தீவில் பரவி அங்கு வசிக்கும் மக்களை அடிமையாகியது.
இந்தநிலையில், இங்கு வசிக்கும் மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக இங்கிலாந்து ஆதிக்கத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் நாடாளுமன்ற தீவின் முதல் அதிபரை தேர்வு செய்து, தீவின் கவர்னர் ஜெனரலாக இருந்த சாண்ட்ரா மோசன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் அதிகாரத்தின் கீழ் பார்படாஸ் தீவு குடியரசு நாடாக அறிவிக்கவிடும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, நேற்று முன் தினம் சாம்பர்லின் பிரிட்ஜ் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்து நள்ளிரவு 12 மணியளவில் பார்படாஸ் தீவு புதிய குடியரசு நாடாக பிறந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அன்றைய இரவு, 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இங்கிலாந்து நாட்டின் கொடிகள் இறக்கப்பட்டு, பார்படாசின் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, அந்த நாட்டின் சின்னம் மற்றும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட 72 வயதான சான்ட்ரா மாசான் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் அவர் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதேபோல், இங்கிலாந்து நாட்டின் கீழ் அடிமையாக இருந்த ஒட்டுமொத்த காமன்வெல்த் அமைப்பில் பார்படாஸ் தீவு உறுப்பினராக தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்