2-வது முறையாக குலுக்கப்பட்ட லாட்டரி… ரூ. 82 லட்சம் விழுந்த அதிர்ஷ்டம்.. ஒரே இரவில் லட்சாதிபதி!
ஏப்ரல் மாதத்தில் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு பரிசு கிடைக்காதவர்களுடைய எண்களை ரேண்டம் முறையில் குலுக்கிய போது அவரது லாட்டரி எண் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
6 மில்லியன் டாலர் ஜாக்பாட்டில் தோற்றவர்களுக்கு மிச்சிகன் லாட்டரி இரண்டாவது வாய்ப்பு தரும் விளையாட்டை அறிமுகப்படுத்திய பின், அதில் முதல் முறை தோற்ற ஒரு அதிர்ஷ்டசாலி அமெரிக்கர் 1,00,000 டாலர் (தோராயமாக ரூ .82.31 லட்சம்) வென்றுள்ளார்.
1 லட்சம் டாலர் லாட்டரி
வெய்ன் கவுண்டியைச் சேர்ந்த ஒரு நபர், இரண்டாவது முறையாக கிடைத்த வாய்ப்பில் லட்சாதிபதியானதை நம்ப முடியாமல் திகைத்தார். அதிகாரப்பூர்வ லாட்டரி வலைத்தளத்தின் செய்திக்குறிப்பில், 'அடையாளம் தெரியாத 43 வயதான நபர், அவர் ஜாக்பாட் வென்றதாக கூறியபோது விளையாட்டுக்கு கூறுவதாக நினைத்துள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு பரிசு கிடைக்காதவர்களுடைய எண்களை ரேண்டம் முறையில் குலுக்கிய போது அவரது லாட்டரி எண் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
இரண்டாவது குலுக்கல்
அப்போது வாங்கிய மிச்சிகன் லாட்டரியில் 6 மில்லியன் டாலர் ஜாக்பாட் லாட்டரியில் அதிர்ஷ்டம் இல்லாமல் தோற்ற நிலையில், அதே லாட்டரி வெல்லாதவர்களுக்கு ஒரு வாய்ப்பாக மீண்டும் குலுக்கபட்டது. இப்போது லாட்டரி அடித்த அவர் வெகு நாட்களாகவே லாட்டரி வாங்கி வருகிறார். ஏப்ரல் மாதம் வாங்கிய டிக்கெட் வெல்லவில்லை என்பதால், இரண்டாவது முறை குலுக்கல் வாய்ப்பு பற்றி அவர் அறிந்ததும், அதை முயற்சித்துப் பார்க்க முடிவு செய்தார். அதனால் தோல்வியுற்ற டிக்கெட்டை மீண்டும் ஸ்கேன் செய்துள்ளார். ஆனால் அவர் வெல்ல முடியும் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்பதால் அதை சொன்னதும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
முதலில் நம்பவில்லை
"நான், 60,00,000 டாலர் ஜாக்பாட் விளையாட்டை தொடர்ந்து விளையாடி வருகிறேன், எனவே விளையாட்டுக்கு இரண்டாவது வாய்ப்புக் கூறி இருப்பதை நான் அறிந்தபோது, நான் அதை முயற்சித்துப் பார்க்கலாம் என்று நினைத்தேன்," என்று அவர் கூறினார். அவர் வெற்றி பெறுவார் என்று நம்பாததால், 1,00,000 டாலர் (தோராயமாக ரூ .82.31 லட்சம்) ஜாக்பாட் பரிசை வென்றது குறித்து சொல்லும்போது நகைச்சுவையாக விளையாடுகிறார்கள் என்று கூறிய அவர் வெல்லவில்லை என்பதில் உறுதியாக இருந்தார். "இரண்டாவது குலுக்கலில் நான் 1,00,000 டாலர் பரிசை வென்றேன் என்று ஒரு நாள் லாட்டரியிலிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது, அது யாரோ அனுப்பிய பிராங்க் மெயில் என்று நான் நினைத்தேன்," என்று அவர் கூறினார்.
சேமிக்க திட்டமிட்டுள்ளார்
உண்மையாக இருக்குமோ என்று சந்தேகித்த அந்த நபர் உடனடியாக லாட்டரி அதிகாரிகளுடன் மின்னஞ்சல் பற்றி தொடர்பு கொண்டார். அப்போதுதான் இது ஒரு விளையாட்டு அல்ல, உண்மைதான் என்பதை அறிந்து கொண்டுள்ளார். "மின்னஞ்சல் ஒரு மோசடி என்பதை உறுதிப்படுத்த நான் லாட்டரி அதிகாரிகளை தொடர்பு கொண்டேன். நான் உண்மையில் வென்றேன் என்று அப்போதுதான் தெரிந்தது," என்று அவர் கூறினார். அந்த தருணத்தை பற்றி கூறிய அவர், முற்றிலும் அதிர்ச்சியடைந்ததாக கூறினார். மேலும் இது எல்லாம் உண்மை என்று நம்புவதற்கு சிறிது நேரம் ஆனது என்று கூறினார். அவர் ஏற்கனவே லாட்டரி தலைமையகத்திடம் பேசிய அவர் எதிர்கால பயன்பாட்டிற்காக வென்ற தொகையை சேமிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.