இன்ஸ்டா, ஃபேஸ்புக், யூடியூபை கைவிடுவது டீன்-ஏஜ் பெண்களுக்கு மிகவும் கடினம்: ஆய்வில் தகவல்
தினசரி இன்டர்நெட் பயன்படுத்தும் இளம் பருவத்தினரின் எண்ணிக்கை 97 சதவீதமாக, அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அண்மையில் அமெரிக்காவில் பியூ ஆராய்ச்சி நிறுவனம் சமூக வலைதளங்களைப் பற்றி, டீன்ஏஜ் வயதினரிடம் அதாவது 13 லிருந்து 20 வயது வரையிலான ஆண் மற்றும் பெண்களிடம் ஆய்வுகளை நடத்தியது.
தற்சமயம் 2014-15ல் இணையத்தை பயன்படுத்தும் டீன் ஏஜினரின் சதவிகிதமானது 92 விழுக்காடு இருந்தது.
ஆனால் இன்றோ அது 97 சதவீதமாக, தினசரி டீன்ஏஜ் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.
2014-15 ஆம் ஆண்டிலிருந்து தாங்கள் தொடர்ந்து ஆன்லைனில் இருப்பதாகக் கூறும் டீன்ஏஜ் வயதினரின் பங்கு ஏறத்தாழ இரண்டு மடங்குகளாக உயர்ந்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் டீன்ஏஜ் வயதினரிடையே ஸ்மார்ட்போன்களுக்கான தேவைகள் மிகவும் அதிகரித்துள்ளன. அதே நேரம் , டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர்கள் அல்லது கேமிங் கன்சோல்கள் போன்ற பிற டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது புள்ளிவிவர ரீதியாக மாறாமல் பழைய எண்ணிக்கையிலேயே உள்ளது என்று கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி 13 வயதில் இருந்து 20 வயது வரை இருக்கும் டீன் ஏஜ் ஆண்கள் மற்றும் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் instagram ஃபேஸ்புக் ட்விட்டர் youtube போன்ற சோசியல் மீடியாக்களில் இருந்து வெளியேற முடியுமா என்ற கேள்விக்கு டீன்ஏஜ் ஆண்களை காட்டிலும் டீன்ஏஜ் பெண்களின் பதில்கள் திகைப்புக்குறியதாக இருக்கிறது.
இதன்படி டீன்ஏஜ் ஆண்களை விட, டீன்ஏஜ் பெண்கள் Instagram, Facebook, Twitter, TikTok மற்றும் YouTube போன்ற சமூக ஊடக தளங்களை விட்டு வெளியேறுவது மிகவும் கடினமாக உள்ளது என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
மாறாக, டீன்ஏஜ் ஆண்களில் நான்கில் ஒரு பகுதியினர் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேறுவது மிகவும் எளிதானது என்று கூறுகிறார்கள், அதே சமயம் 15 சதவீத டீன்ஏஜ் பெண்களும் சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறுவது எளிதான விஷயம் என்று கூறுகிறார்கள். 54 சதவீத டீன்ஏஜ் வயதினர் சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறிவது பற்றி கேட்டபொழுது அதை விட்டுவிடுவது சற்று கடினமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
அதே நேரம் 46 சதவிகித டீன்ஏஜ் வயதினர் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் மற்றும் youtube போன்ற சமூக வலைத்தளகங்களில் இருந்து விலகுவது குறைந்தபட்சம் ஓரளவு எளிதாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
டீன்ஏஜ் ஆண்களை விட டீன்ஏஜ் பெண்கள் instagram ,ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் youtube போன்ற சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறுவது கடினம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள் .இது 49 சதவீதத்திலிருந்து 58 சதவீதத்தினர் இத்தகைய பதில்களை தெரிவிக்கின்றனர்.
15 முதல் 17 வயதுடைய டீன் ஏஜ் வயதினர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் youtube போன்ற சமூக ஊடகங்களைக் கைவிடுவது ஓரளவு கடினமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
13-லிருந்து 14 வயதுடைய டீன் ஏஜ் வயதினரும் இத்தகைய சமூக ஊடகங்களை விட்டு வெளியேறுவது என்பது கடினமான காரியம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்
டீன் ஏஜ் வயதில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சமூக ஊடகங்களில் அவர்கள் செலவிடும் நேரத்தைப் பற்றி கேட்கும் போது, பெரும்பாலான அமெரிக்கப் டீன்ஏஜ் வயதினர் 54 சதவீதம் பேர் ஆப்ஸ் மற்றும் தளங்களில் சரியான நேரத்தைச் செலவிடுவதாகக் கூறுகிறார்கள். அதே சமயம் டீன்ஏஜ் வயதினரில் மூன்றில் ஒரு பகுதியினர் அதாவது 36 சதவீதம் பேர் அவர்களுடைய சமூக வலைதளங்களில் அதாவது ஃபேஸ்புக், ட்விட்டர் ,youtube மற்றும் இன்ஸ்டாகிராம் எனப்படும் சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.
மேற்கூறிய ஆய்வறிக்கையை காணும் பொழுது இணையத்தில் உலாவரும் ஒரு நகைச்சுவை குறும்படம் நம் மனதில் நிழலாடுவதை தவிர்க்க முடியவில்லை.அந்த குறும்படத்தில் ஒரு அலுவலகத்தில் நான்கைந்து பேர் தீவிரமான விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் இந்த விவாதத்தின் இடையே சமூக வலைதளங்களை பயன்படுத்தியபடியே இருப்பார்.
இதைக் கண்டு அந்த விவாதத்தின் தலைவர் அந்த பெண்மணியின் போனை பறித்து ஓரம் வைத்து விடுவார், உடனடியாக அந்தப் பெண்மணிக்கு கை கால்கள் வலிப்பு போல வந்து வாயில் நுரை தள்ள ஆரம்பித்து விடும், அனைவரும் சாவிக்கொத்தை தேடும் பொழுது, அந்த விவாதத்தின் தலைவர் அந்த பெண்ணிடம் இருந்து பறித்த செல்போனை அவள் கையில் கொடுக்கவும் வாயில் நுரை தள்ளியது எல்லாம் நின்று அந்தப் பெண் சகஜ நிலைக்கு திரும்புவார். இப்படியாக இந்த குறும்படம் எதிர்காலத்தில் உண்மையில் நடக்காது என்று கூற முடியாது.
ஆகையால் பெற்றோர்கள்தான் 13 இல் இருந்து 20 வயதுக்குள் இருக்கும் டீன்ஏஜ் பிள்ளைகளுக்கு இத்தகைய கேஜெட்டுகளின் பயன்பாடுகளையும் சமூக வலைதளங்களில் மற்றும் இணையங்களில் அவர்கள் உலா வருவதை ஒரு கட்டுக்குள் வைக்க வேண்டும் . இல்லையெனில் கற்றுக் கொள்ளும் இந்த பருவத்தில் தேவையில்லாத சிந்தனைகளும் உடல் உழைப்பின்மையும் டீன்ஏஜ் வயதினரின் உடலையும் மனதையும் வெகுவாக பாதித்துவிடும் இது அவர்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்