மேலும் அறிய

Nobel Prize | காலனியம் தொடர்பான எழுத்து... இலக்கியத்துக்கான நோபலை வென்றார் அப்துல் ரசாக் குர்னா.. யார் இவர்?

அப்துல் ரசாக் குர்னா இதுவரை 10 நாவல்களையும், பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் உலக இலக்கியத்தில் மிகவும் மதிப்பு வாய்ந்த விருதான நோபல் பரிசை பெறும் முதல் ஆப்ரிக்கர் இவராவார்.

2021ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தான்சானியா நாட்டை சேர்ந்த நாவலாசிரியர் அப்துல் ரசாக் குர்னாவிற்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலனியத்தின் விளைவுகள் மற்றும் அகதிகளின் வாழ்க்கைக் குறித்து பதிவு செய்ததற்காக இவருக்கு நோபல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இலக்கியத்துக்கான நோபலை வென்றுள்ளார் அப்துல் ரசாக் குர்னா.

குன்ராஹ் 1948ம் ஆண்டு ஆஃப்ரிக்காவின் தான்சானியா நாட்டில் உள்ள சன்சிபரில் பிறந்தவர். தற்போது பிரிட்டனில் வாழ்ந்து வருகிறார். கெண்ட் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். 1964ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைப் பிடித்தபோது தனது 18வது வயதில் தனது நாட்டை விட்டு வெளியேறினார். இதுவரை 10 நாவல்களையும், பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் உலக இலக்கியத்தில் மிகவும் மதிப்பு வாய்ந்த விருதான நோபல் பரிசை பெறும் முதல் ஆப்ரிக்கர் இவராவார்.  முதன்முதலாக ஆப்ரிக்காவிலிருந்து 1986ம் ஆண்டு வோலே சொயின்கா  கடைசியாக 2003ம் ஆண்டு ஜான் மேக்ஸ்வெல் கொயெட்ஜி ஆகியோர் நோபலை வென்றனர். 

அப்துல் ரசாக் குர்னா முக்கியமான பின் காலனிய எழுத்தாளர்களில் ஒருவர் என நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. "கிழக்கு ஆப்பிரிக்காவில் காலனியத்தின் விளைவுகள் மற்றும் ஒவ்வொரு ஊர்களிலிருந்தும் வேரோடு பிடுங்கப்பட்ட மற்றும் புலம்பெயர்ந்த தனிநபர்களின் வாழ்க்கையில் காலனியத்தின் விளைவுகள் குறித்து தன்னுடைய ஒவ்வொரு படைப்பிலும் அவர்  வெளிப்படுத்தியுள்ளார். “Memory of Departure,” “Pilgrims Way” ஆகியவை இவரின் முக்கியமான புத்தகங்கள். இரண்டும் புலம்பெயர்ந்து பிரிட்டனில் குடியேறியவரின் அனுபவங்களைப் பேசுகிறது. “Paradise” எனும் நூல் 1994ம் ஆண்டு புக்கர் பரிசுக்கு இறுதி செய்யப்பட்டது. இது ஆஃப்ரிக்காவை மையமாகக் கொண்டு முதல் உலகப்போரின் போது நிகழ்ந்த சம்பவங்களைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது.
கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞர் லூயி க்ளக்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. குறைவான பெண் எழுத்தாளர்களுக்கே நோபல் வழங்கப்படுவதாக நோபல் கமிட்டியின் மீது விமர்சனம் எழுந்த வண்ணம் இருந்தது. அதனைத் தொடர்ந்து லூயி க்ளக் நோபலை வென்றார்.

இது கொரோனா காலமாக இல்லாதிருந்தால் வரும் டிசம்பர் 10ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் அப்துல் ரசாக் குர்னா தனது நோபல் விருதைப் பெற்றுக்கொண்டிருப்பார். ஆனால் கொரோனா விதிமுறைகளின் காரணமாக அவரது சொந்த ஊரிலேயே வைத்து விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget