ஆப்கானிஸ்தானில் அமெரிக்க யுக்தி தோல்வியுற்றது ஏன்? காரணம் என்ன?
1965-75 ஆண்டுகளில் நடைபெற்ற வியட்நாம் போருக்குப் பிறகு ,அமெரிக்காவின் மிகப்பெரிய தோல்வியாக கருதப்படுகிறது
காபூல் நகரைக் கைப்பற்றியதன் மூலம் ஆப்கானிஸ்தானின் அதிகாரப்புள்ளியாக தலிபான் உயர்ந்துள்ளது. ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா, டொனால்டு ட்ரம்ப், ஜோ பைடன் என நான்கு அமெரிக்க அதிபர்கள் மீதான ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு முடிவுக்கு வந்துள்ளது. 1965-75 ஆண்டுகளில் நடைபெற்ற வியட்நாம் போருக்குப் பிறகு ,அமெரிக்காவின் மிகப்பெரிய தோல்வியாக கருதப்படுகிறது.
வியட்நாம் சண்டைக்கும், ஆப்கான் படையெடுக்கும் அதிகம் ஒற்றுமை இருப்பது போல், வேறுபாடுகளும் உள்ளன. முதாலாவது, வியட்நாம் சண்டை, பனிப்போரின் ஒரு அங்கமாக இருந்தது. பொதுவுடமை சிந்தனைக்கு எதிரான ஒரு போராகத் தான் வியட்நாம் சண்டையை அமெரிக்கா முன்னேடுத்தது. இந்த சண்டையில் அமெரிக்கா நேரடியாக கலந்து கொள்ளவில்லை. இப்போரானது அதிகாரப்பூர்வமாக வியட்நாம் ஜனநாயகக் குடியரசுக்கும் (வடக்கு வியட்நாம்) ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்பட்ட தெற்கு வியட்நாமுக்கும் இடையில் இடம்பெற்றது.
ஆனால், ஆப்கானிஸ்தான் சண்டையில் அமெரிக்கா நேரடியாக கலந்துகொண்டது. செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவின் உலக வர்த்த மைய கட்டிடம், ராணுவ தலைமையகம் (பென்டகன்) ஆகியவற்றின் மீது அல் கைதா அமைப்பு விமானத்தை மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியது. இதனையடுத்துதான், ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலை நேரடியாக தொடர்ந்தது.
20 ஆண்டுகாலம் ஆப்கானிஸ்தானில் முகாம்:
கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் அமெரிக்கா ராணுவப் படைகளை ஆப்கானிஸ்தானில் முகாமிட்டது. வியட்னாம் சண்டைபோல் அல்லாமல், தான் ஆக்கிரமித்த நாடான ஆப்கானிஸ்தானை மறுசீரமைக்க அமெரிக்கா முனைந்தது. 2001-ஆம் ஆண்டு முதல், அமெரிக்கா அரசு 48 பில்லியன் டாலரை செலவு செய்துள்ளது. இந்த முதலீட்டால் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அதிகம் பயனடைந்தன. லட்சக்கணக்கான அமெரிக்கா கூட்டுப் படைகள் முகாமிட்டிருந்தன.
36 days ago, President Biden told the American people that the Taliban would not take over #Afghanistan after he ordered the removal of U.S. troops. pic.twitter.com/FiG5pWsyey
— POLARIS (@polarisnatsec) August 13, 2021
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் இருந்து கூட்டுப் படையைத் திரும்பப்பெறுவது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜோ பைடன், "ஆப்கானிஸ்தானில் 3 லட்சம் வீரர்களை கொண்ட இராணுவப் படையை உருவாக்கியுள்ளோம். நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய விமானப்படை உருவாக்கப்பட்டுள்ளது. 75,000 போராட்டக்கார்களை கொண்ட தலிபான் அமைப்பால் ஆப்கான் படை வீரர்களை தோற்கடிக்க முடியாது" என்று தெரிவித்தார்.
அமெரிக்கா செய்த தவறு என்ன? அமெரிக்கா தனது அதிகப்படியான முதலீடுகளை ராணுவ கட்டமைப்பில் முடக்கியது. மேலும், ஜனநாயக அரசாங்கங்கள் ஆப்கானிஸ்தானில் நிறுவப்படவேண்டும் என்ற அதிக முனைப்பும் காணப்பட்டது. ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான மக்களுக்கு ஜனநாயக முறை குறித்தும், அதிபர் தேர்தல் குறித்து விழிப்புணர்வு இல்லாத நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் பலமுறை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றிருந்தாலும், அநேக மக்கள் அரசியல்படுத்தப்படாமல் இருந்தன. அதன் காரணமாக, தலிபானுக்கு எதிரான போராட்டாம் ஒரு மக்கள் இயக்கமாக அங்கு மாறவில்லை.
அமெரிக்கா கையாண்ட யுக்தி தவறானது ஏன்?
2003ல், ஈராக் மீது அமெரிக்கா போர் எடுத்தது. உண்மையில் இந்த போர் தான் ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. ஆப்கானிஸ்தான் மீதான் ஆர்வம் அமெரிக்காவுக்கு குறையத் தொடங்கியது. இராக் போரில், அல் கொய்தா -ஈராக் (al Qaeda in Iraq) அமைப்புக்கு எதிராக ஷன்னி விழிப்புணர்வு (Sunni Awakening) இயக்கத்துக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. அதேபோன்ற ஒரு யுக்தியைத் தான் ஆப்கானிஸ்தானில் செயல்படுத்தியது. உதாரணமாக, தாலிபான்கள் பெரும்பாலனோர் பத்தான் வகுப்பினரைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு, எதிராக tajiks, Uzbeks போன்ற பிரிவினரை திரட்டும் முயற்சியை அமெரிக்கா மேற்கொண்டது. ஆனால், இந்த முயற்சி கடுமையாக தோல்வியடைந்தது. உதாரணமாக, தாலிபான் படைகளில் அதிகமானோர் tajiks, Uzbeks பிரிவனர் இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன். எனவே, பல்வேறு தரப்பினரின் ஆதரவைப் பெற்ற இயக்கமாக மாறியுள்ளது. தாலிபான் அமைப்பின் இந்த மாற்றமே அமெரிக்காவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
நியாயமாக சிந்தித்தால், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தோல்வி, தாலிபானின் வெற்றி என்று பொருள் கொள்வதை விட, கடந்த 20 ஆண்டுகளாக சுதந்திரத்தை அனுபவத்து வந்த ஆப்கான் மக்களுக்கு, குறிப்பாக சிறுபான்மையினருக்கு, பெண்களுக்கு, மனித உரிமை ஆர்வலர்களுக்கு, கலைத் துறையினருக்கு ஏற்பட்ட பேரிழப்பாக உணரப்படுகிறது.
மேலும், வாசிக்க:
China Taliban Relation: தாலிபன்களுடன் நட்புறவை விரும்புகிறது சீனா..ஏன்?
Afghanistan Crisis: இந்தியர்களை மீட்க காபூலுக்கு விரைந்தது C-17 ரக இந்திய விமானப்படையின் விமானம்..!