Swiggy : தொடரும் பணிநீக்கங்கள்... அமேசானை அடுத்து ஸ்விக்கி தந்த அதிர்ச்சி தகவல்.... கதரும் பணியாளர்கள்!
ட்விட்டர், பேஸ்புக், அமேசானை தொடர்ந்து, தற்போது ஸ்விக்கி நிறுவனம் இந்த மாதம் 250 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
உணவு விநியோகம் செய்யும் நிறுவனமான ஸ்விக்கி, டிசம்பரில் 250 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செலவுக் குறைப்பு முயற்சிகள் மற்றும் லாபம் ஈட்டுவதன் காரணமாக கிட்டத்தட்ட 3 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக Zomato கடந்த மாதம் கூறியது. வரும் காலங்களில் பணிநீக்கங்கள் அதிகளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, ஸ்விக்கி நிறுவனம் டிசம்பரில் 250 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊழியர்களின் வேலை திறனை பொறுத்து வரும் காலங்களில் பணி நீக்கமானது இருக்கும் என்றும் ஸ்விக்கி நிறுவனம் கூறியதாக சொல்லப்படுகிறது. அதன்படி, தற்போதான பணிநீக்கமானது, ஊழியர்கள் முறையாக வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதாலும், அவர்களின் ratings ஆனது மிக குறைந்த அளவில் இருப்பதாலும், இந்த மாதம் 250 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளளதாக தெரிவித்தது.
மேலும் கடந்த மாதம் ஊழியர்களின் ratings பொறுத்தும் சில ஊழியர்களுக்கு பணி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்தது. கடந்த மாதத்தின் ratings பொறுத்தே 250 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு இதுவரை அவர்கள் பெற்ற ratings பொறுத்து அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதாக ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளதாக சொல்லபப்டுகிறது.
ட்விட்டர், பேஸ்புக், மெட்டா, அமேசான் இந்தியாவில் பைஜூஸ், ஓயோ என பல்வேறு நிறுவனங்களும் ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. அந்த வகையில், அமேசான் நிறுவனத்தில் இருந்து சுமார் 20,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமேசானில் ஒரு பெரிய அளவிலான பணிநீக்கம் வரும் மாதங்களில் நடைபெறும் என்று தகவல்கள வெளியாகியுள்ளது. மேலும் நிறுவனத்தின் பல பிராந்தியங்களில் உள்ள அவர்களின் விநியோக மையங்களில் இருந்து மக்களை நீக்கம் செய்ய உள்ளார்கள். நிறுவனம் தங்கள் தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் கார்ப்பரேட் நிர்வாகிகளையும் பணிநீக்கம் செய்ய உள்ளது.
மேலும், ஓயோ குழுமம் தனது நிறுவனத்தின் பல்வேறு குழுக்களை ஒருங்கிணைக்க முடிவெடுத்துள்ள நிலையில், ஆட்குறைப்பிலும் ஈடுபட்டுள்ளது. அதன்படி தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புக் குழுக்களைச் சேர்ந்த 600 ஊழியர்களை முதற்கட்டமாக வேலை நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலும் விற்பனைக் குழுவில் 250 நிர்வாகிகளை புதிதாக பணியமர்த்தவும் முடிவு செய்துள்ளது. அதன்படி தற்சமயம் 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்து உறுப்பினர்களை புதிதாக பணியமர்த்த உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ட்விட்டர் பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை பரபரப்பு! இம்முறையாவது சோலங்கியின் சாதனை முறியடிக்கப்படுமா?