Sunita Williams:விண்வெளியில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ்.! எமோஷனலாக பேசிய தாய்.!
Sunita Williams Mother: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் குறித்து அவரது தாய் மற்றும் கணவர் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜூன் மாதம் ஏவப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி பயணங்களை சோதனை செய்யும் வகையில் இரண்டு விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது.
நீட்டித்த பயணம்:
முதலில் சுமார் எட்டு நாட்கள் பயணம் என்று முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், விண்கலத்தை உந்தி தள்ளும் அமைப்பில் உள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாக இவர்கள் பயணம் கணிசமாக நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, பிரச்னைகளை சரிசெய்ய போயிங் மற்றும் நாசா அவசரமாக தீவிர முயற்சித்து வருகின்றன.
இந்த சிக்கல்களால் ஸ்டார்லைனரின் விண்கலத்தில் பயணித்த மூத்த நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை உடனடியாக திரும்ப அழைத்து வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ்
இதன் விளைவாக, அவர்களை பூமிக்கு கொண்டு வர ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தை பயன்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான SpaceX க்ரூ டிராகன் விண்கலம், செப்டம்பரில் வழக்கமான நான்கு விண்வெளி வீரர்களுக்குப் பதிலாக இரண்டு விண்வெளி வீரர்களை மட்டுமே கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வில்மோர் மற்றும் வில்லியம்ஸுடன் பூமிக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
LIVE: Listen in for the latest updates on @Space_Station operations and @BoeingSpace's #Starliner Crew Flight Test mission. https://t.co/97eN6i7IrS pic.twitter.com/nWlCpa4dnq
— NASA (@NASA) August 7, 2024
சுனிதா வில்லியம்ஸ் தாய்:
பூமி திரும்புவதில் தாமதம் குறித்து தெரிவிக்கையில் “ நான் கவலைப்படவில்லை, நான் அவளுக்கு எந்த ஆலோசனையும் வழங்கவில்லை. என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியும். அவர் ஒரு அனுபவமிக்க விண்வெளி வீராங்கனை. அவர் 400 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் இருந்துள்ளார்" என்று தாய் கூறினார்.
தனது தாயுடன் பேசிய சுனிதா வில்லியம்ஸ், "கவலைப்பட வேண்டாம்" என்று தனது தாயிடம் கேட்டுக் கொண்டார், மேலும் எல்லாம் சரியாகிவிடும்" என தெரிவித்தார்.
இதற்கிடையில், சுனிதா வில்லியம்ஸின் கணவர் மைக்கேல் ஜே வில்லியம்ஸ், தெரிவிக்கையில் "அது தான் அவளுடைய மகிழ்ச்சியான இடம்" என்று தெரிவித்தார்.