இலங்கையில் ஏற்பட்ட கலவரம்: போலீசாரிடம் சிக்கிய மஹிந்த ராஜபக்ச! 5 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை!
இலங்கையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் அந்த நாட்டு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கடந்த 9-ந் தேதி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது முன்னாள் பிரதமர் ராஜபக்ச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால், இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு இலங்கையே களேபர பூமியாகியது. இந்த நிலையில், இந்த போராட்டம் தொடர்பாக அந்த நாட்டு சி.ஐ.டி. போலீசார் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை விசாரித்துள்ளனர். கொழும்புவில் உள்ள அவரது இல்லத்தில் இந்த விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையில், அமைதியாக நடந்த போராட்டத்தில் கலவரம் வெடிததது எப்படி? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை போலீசார் முன்வைத்துள்ளனர். முன்னதாக, அவரது மகன் நமல் ராஜபக்சவிடமும் போலீசார் விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்