Srilankan Crisis : கண்டித்த அமெரிக்கா.. தியாகம் குறித்து பேசிய மஹிந்த ராஜபக்சே.. பதவி விலகலுக்கு முன்பு நடந்தது என்ன?
பதவி விலகலுக்கு முன்பாக, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, `மக்களுக்காக எந்த வித தியாகத்தை மேற்கொள்ளத் தயாராக’ இருப்பதாக தெரிவித்திருந்தார்
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகக்கோரி கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் போரட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.
இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதனைத் தடுப்பதற்காக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், அவரது சகோதரரும், அந்நாடின் அதிபருமான கோத்தபய ராஜபக்சேவும் இடைக்கால அரசை உருவாக்குவது குறித்து அழுத்தம் உருவாகி வரும் சூழலில், மகிந்த ராஜபக்சே, பதவி விலகலுக்கு கொஞ்சம் முன்னர், `மக்களுக்காக எந்த வித தியாகத்தை மேற்கொள்ளத் தயாராக’ இருப்பதாக பேசினார்
மகிந்த ராஜபக்சேவுக்குத் தனது சொந்தக் கட்சியான ஸ்ரீலங்கா பொடுஜனா பெரமுனா கட்சிக்காரர்களே அவரது பதவி விலகலைக் கோரி அழுத்தம் தரும் நிலையில், தனது ஆதரவாளர்களிடம் தனக்காக கோரி அவர் ஆதரவு திரட்டி வந்தார்.
நேரடியாக தனது முடிவை வெளிப்படுத்தாதபோதும், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தேச ஒற்றுமையை முன்னிலைப்படுத்தும் இடைக்கால தயாரிப்புகளை மேற்கொண்டு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக விரும்புவதாகக் கூறப்படுகிறது.
தனது பதவி விலகலை வெளிப்படுத்தும் விதமாக தனது ஆதரவாளர்களிடையே பேசிய இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, `மக்களுக்காக எந்தத் தியாகத்தையும் மேற்கொள்ளத் தயார்’ எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிந்த ராஜபக்சே பதவி விலகக் கூடாது எனக் கோரிக்கை விடுத்து பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கூடிய ஸ்ரீலங்கா பொடுஜனா பெரமுனா கட்சியினரின் முன்னிலையில் மகிந்த ராஜபக்சே இவ்வாறு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முன்பு பேசியுள்ள ஆளுங்கட்சி எதிர்ப்பாளரான தயாசிரி ஜெயசேகரா என்பவர், ”மகிந்த ராஜபக்சே நேரடியாக பதவி விலகலை அளிக்க மாட்டார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நான் பொறுப்பு இல்லை, எனவே நான் பதவி விலக மாட்டேன் என அவர் கூறுவதற்கான வாய்ப்புகள் உண்டு’ எனக் கூறியுள்ளார். மேலும், அவர் பதவி விலகுவதை கோத்தபய ராஜபக்சேவின் நீதிமன்றம் ஆணையிடட்டும் எனவும் அவர் கூற வாய்ப்புள்ளதாகவும் இவர் தெரிவித்தார். கடும் அழுத்தங்களை மீறியும், கோத்தபய, மகிந்த ஆகியோர் பதவி விலகாமல் இருந்தது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கடந்த மே 6 அன்று, அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தை நடத்திய அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். கடந்த ஒரே மாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் அவசர நிலை இது. இதனைக் கண்டித்துள்ள அமெரிக்க அரசின் இலங்கைக்கான தூதர் ஜூலி சங், மக்களின் கோரிக்கைகள் கேட்கப்பட வேண்டும்” எனக் கூறினார்.
வெளிநாட்டுச் செலாவணி இல்லாத காரணத்தை பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இலங்கையில் மக்களின் உணவு, எரிபொருள் முதலானவை தட்டுப்பாட்டில் இருப்பதோடு, அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதிக்கான இலங்கை அரசிடம் பணம் இல்லாததால், அவற்றின் விலைகள் விண்ணைத் தொட்டுள்ளன. மேலும், எரிபொருள், மருந்து, மின்சார இணைப்பு முதலானவையும் மக்களுக்குக் கிடைக்காத நிலையில், கடந்த ஏப்ரல் 9 முதல் ஆயிரக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.