Ranil emergency: இலங்கை பிரதமர் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள்; அவசரநிலை பிரகடனம் ஏன்- ரணில் விளக்கம்
இலங்கையில் ஏன் அவசர நிலை பிரகடனம் ஏன் அமலபடுத்தப்பட்டது குறித்து ரணில் விக்ரம சிங்க விளக்கம் அளித்துள்ளார்
ரணில் விக்ரமசிங்க விளக்கம்:
இலங்கையில் ஏன் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று ரணில் விக்ரம சிங்க விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, "மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினரின் ஆலோசனைப்படி, அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது" என ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.
தப்பிச் சென்ற அதிபர்:
மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கையில் அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக கடும் போராட்டம் நடைபெற்றும் வரும் நிலையில், இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டபய இன்று காலை மாலத்தீவு தலைநகர் மாலியில் உள்ள வேலனா விமான நிலையத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
#BREAKING Sri Lanka declares state of emergency after president flees: PM's office pic.twitter.com/0IkJMZKKJV
— AFP News Agency (@AFP) July 13, 2022
தொடரும் போராட்டம்:
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தையும் முடக்கியுள்ளனர். போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். தற்போது அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
View this post on Instagram
#WATCH | Sri Lanka: Inside visuals from the premises of Sri Lanka's Prime Minister's office in Colombo after it was stormed by protestors pic.twitter.com/nEoc9zsoBk
— ANI (@ANI) July 13, 2022
Also Read: Srilanka Emergency : தப்பியோடிய அதிபர் கோட்டபய ராஜபக்ச.. இலங்கையில் அவசர நிலை பிரகடனம் அறிவிப்பு..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்