மேலும் அறிய
Advertisement
Ranil Wickremesinghe: 'இனி அதிமேதகு வேண்டாம்.! நாட்டு மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க உரை.! பிரதமராகிறார் பிரேமதாச.!
நாட்டிற்கு ஒரே ஒரு தேசியக் கொடியே தேவைப்படுவதால், ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ கொடி ஒழிக்கப்படும் என விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்
இலங்கையில் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே நாட்டு மக்களுக்கு காணொளி காட்சி மூலம் உரையாற்றியுள்ளார். அதில் அவர் பல்வேறு கருத்துக்களை முன் வைத்துள்ளார். குறிப்பாக, நாட்டிற்கு தேவை ஒரே ஒரு தேசியக்கொடி மட்டுமே., ஜனாதிபதிக்கு என தனி கொடி தேவை இல்லை, ஜனாதிபதி பதவியில் இருப்பவரை அதிமேதகு என அழைக்க தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை இலங்கையின் பதில் ஜனாதிபதியாக நான் செயற்படுவேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று அறிக்கையொன்றை விடுத்துள்ள விக்கிரமசிங்க, இந்தக் காலப்பகுதியில் தற்காலிக ஜனாதிபதியாக தற்காலிகமாக செயற்படவுள்ளதாக தெரிவித்தார். இலங்கையின் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க மேலும் அறிவித்துள்ளார். முதலாவதாக, குடியரசுத் தலைவருக்குப் பயன்படுத்தப்படும் “அதிமேதகு” என்ற சொல் இனி பயன்படுத்தப்படாது என்று அவர் கூறினார். இரண்டாவதாக, நாட்டிற்கு ஒரே ஒரு தேசியக் கொடியே தேவைப்படுவதால், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடி ஒழிக்கப்படும் என விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பதில் ஜனாதிபதியாக தற்காலிகமாக கடமையாற்றும் போது மேற்கொள்ள வேண்டிய பின்வரும் முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீள அமுல்படுத்துவதற்கு தேவையான சட்டமூலங்களை முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த வாரம் தேர்வு செய்யப்படவுள்ள புதிய ஜனாதிபதிக்கு 19வது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணப்படுவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது தொடர்பாக எம்.பி.க்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்துவதற்காக முப்படையினர் மற்றும் போலீசாரை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் அனைத்துக் கட்சிகளும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசியலமைப்பை பாதுகாப்பதாகவும், அரசியலமைப்பை மீறும் எந்தவொரு செயலுக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும், அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயற்படுவேன் என்றும் பதில் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். இதனிடையே, சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார். பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
விழுப்புரம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion