Sri lanka Crisis: பொருளாதார நெருக்கடி - இலங்கையிலிருந்து அகதிகளாக 4 பேர் தனுஷ்கோடி வருகை!
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து அகதிகளாக 4 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்கள் நான்கு பேர் , இலங்கையில் இருந்து அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். ஆபத்தான முறையில் 2 குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்த பெற்றோரிடம் மரைன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் இருந்து ஏற்கனவே 2 குடும்பங்களாக 16 பேர் தமிழ்நாட்டிற்கு தஞ்சமடைந்தநிலையில், மேலும், நான்கு இலங்கை தமிழர்கள் தமிழ்நாடு வந்துள்ளனர்.
இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை தமிழர்கள் மீண்டும் தமிழகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும்மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வர தொடங்கியுள்ள நிலையில், இன்று அதிகாலை இரண்டு குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் ஒரு குடும்பத்தினர் ஆபத்தான முறையில் கடல் வழிப்பயணம் செய்து அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.
இதே போன்று நேற்று இலங்கை மன்னாரில் இருந்து கள்ளத்தோணி மூலம் சட்டவிரோதமாக தமிழகத்திற்கு வர முயன்ற 12 பேரை அங்கு இலங்கை கடற்படையினர் பிடித்து தடுத்து நிறுத்தி விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை தமிழர்கள் இறுதிகட்ட போரின்போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் வந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர்.
இதேபோல், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகள் உள்ளதால், இலங்கை தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வரக்கூடும் என, சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு இரண்டு குழந்தைகளுடன் ஒரு குடும்பத்தினர் இலங்கையில் தமிழகத்திற்கு தப்பி வந்துள்ளனர்
அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், இலங்கை தமிழர்களை அழைத்து வரவும். மணல் திட்டில் காலை முதல் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வரும் இலங்கைத் தமிழர்களை மீட்டு இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் க்யூ பிரிவு போலீசார் நடவடிக்கைகள எடுத்து வருகின்றனர்.
இலங்கையில் இருந்து ஏற்கனவே 2 குடும்பங்களாக 16 பேர் தமிழ்நாட்டிற்கு தஞ்சமடைந்தநிலையில், மேலும், நான்கு இலங்கை தமிழர்கள் தமிழகம் வந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்