மேலும் அறிய

America Vs Gulf: ‘பட்டது போதும்டா சாமி, நீங்க முதல்ல கிளம்புங்க.!‘ அமெரிக்காவை வெளியேற்ற வளைகுடா நாடுகள் முடிவு.?!

ஈரானுக்கு எதிரான போரில் அதிகம் பாதிக்கப்பட்ட வளைகுடா நாடுகள், அமெரிக்காவை தங்கள் இடங்களிலிருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களும் எவ்வளவு நாட்கள் தான் பொறுப்பார்கள்.?

அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடுத்த போரில், இந்த மூன்று நாடுகளையும்விட, சம்பந்தமே இல்லாமல் அதிக பாதிப்பை சந்தித்தது வளைகுடாவில் உள்ள அரபு நாடுகள் தான். இந்த நிலையில், போர்நிறுத்தம் ஏற்பட்டதால் நிம்மதி அடைந்திருந்த அவர்கள், அப்படியே இந்த போர் முடிந்துவிடும் என்று எதிர்பார்திருந்தனர். ஆனால், போகிற போக்கை பார்த்தால், மீண்டும் அதைவிட மிகப்பெரிய போர் தொடங்கும்போல் உள்ள. இதனால், இனிமேலும் அடி வாங்க முடியாது என்று முடிவு செய்த அரபு நாடுகள், அமெரிக்காவை தங்கள் நாடுகளில் உள்ள ராணுவ தளங்களை காலி செய்யுமாறு கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.

ஈரானுக்கு எதிரான போரில் பாதிக்கப்பட்ட அரபு நாடுகள்

அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு ஈரானுக்கு அழுத்தம் கொடுத்துவந்த அமெரிக்கா, இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்த போதிலும், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது அமெரிக்கா. இந்த தாக்குதல்களை, வளைகுடா நாடுகளில் உள்ள தங்களது ராணுவ தளங்களிலிருந்து நடத்தியது அமெரிக்கார். இதைத் தொடர்ந்து, தயாராக இருந்த ஈரானும் பதில் தாக்குதலை தொடங்கியது.

ஆனால், இதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால், அமெரிக்காவும் இஸ்ரேலும் எதிர்பார்க்காத விதமாக, வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தியது ஈரான். ஏனென்றால், அங்கிருந்து அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த முடியாது. அதேபோல், இஸ்ரேல் மீது முழு அளவிலான தாக்குதல்களை நடத்த முடியாது. அதனால், தனது யுத்தியை மாற்றிய ஈரான், கூட்டுப்படைகளுக்கு ராணுவ தளங்களை கொடுத்து உதவும் நாடுகளில் உள்ள எதிரிகளின் ராணுவ தளங்களை குறி வைத்து, அதாவது கத்தார், துபாய், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல்களை நடத்தியது.

மேலும், போர் தீவிரமடைந்தபோது, அரபு நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்கள் மீதும், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களையும் குறி வைத்தது ஈரான். இதனால் ஆடிப்போன அரபு நாடுகள், செய்வதறியாது தவித்து வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தியும் மூடப்பட்டதால், அங்கிருந்து கச்சா எண்ணெய் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதேபோல், விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலு, போரால் சுற்றுலாவும்  பாதிக்ப்பட்டதால், அரபு நாடுகளுக்கு பெரும் வர்த்தக நஷ்டமும் ஏற்பட்டது.

மொத்தத்தில், போர் என்னவோ, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே இருந்தாலும், கண்கூடாக பாதிக்கப்பட்டது என்னவோ அரபு நாடுகள் தான்.

அமெரிக்காவை வெளியேற்ற அரபு நாடுகள் முடிவு.?

இத்தகைய சூழலில், 2 வார காலம் போர் நிறுத்தம் ஏற்பட்டதால் நிம்மதியடைந்திருந்த அரபு நாடுகள், அப்படியே நிரந்தர போர் நிறுத்தமும் ஏற்பட்டுவிடும் என்று எண்ணி இருந்தன. ஆனால், தற்போது முன்பை விட பெரிய போர் தொடங்கும் அளவிற்கு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

இதனால் பீதியடைந்துள்ள வளைகுடா நாடுகள், தங்கள் நாடுகளில் உள்ள ராணுவ தளங்களை மூடிவிட்டு, அமெரிக்காவை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கிளம்பிய முதல் குரல்

இதை மெய்ப்பிக்கும் விதமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து முதல் குரல் ஒலித்துள்ளது. ஆம், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இனி அமெரிக்கா தேவை இல்லை என்றும், எமிரேட்ஸில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை மூட வேண்டும் என்றும், அந்நாட்டின் பிரபலமான அரசியல் விமர்சகரும், அரசியல் அறிவியல் பேராசிரியருமான அப்துல்காலெக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஒரு காலத்தில் தேவைப்பட்டது போல், அமீரகத்தை பாதுகாக்க இனி அமெரிக்கா தேவை இல்லை என்றும், ஈரானிய தாக்குதலின் போது, தங்களால் தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை அமீரகம் நிரூபித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவிடமிருந்து மேம்பட்ட ஆயுதங்களை பெற வேண்டும் என்றாலும், அதற்காக அமெரிக்க ராணுவ தளங்கள் இங்கு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு, ராணுவ தளங்களைவிட, நவீன ராணுவ தளவாடங்களை பெறுவதே அமீரகத்தின் முன்னுரிமை என்றும் அவர் அப்துல்லா கூறியுள்ளார்.

இந்த தகவல்களால், தற்போது மத்திய கிழக்கில் புதுவிதமான பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா இதை எப்படி சமாளிக்கும், ஒருவேளை அரபு நாடுகள் மீதும் தாக்குதல் நடத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

தலைப்பு செய்திகள்

Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
New Maruti Baleno Facelift: சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
சந்திரமுகி போல் மொத்தமாக மாறி வரும் மாருதி பலேனோ.! புதிய ஃபேஸ்லிஃப்ட் அவதாரத்தின் லாஞ்ச் எப்போ.?
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Embed widget