Crime : திருமணத்தில் சண்டை..! கொலை செய்யப்பட்டார்களா விருந்தினர்கள்..? நடந்தது என்ன..?
இந்த கொலை சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை அதிகாரிகள் கைது செய்து, நான்காவது நபரை தேடி வருகின்றனர்.
ஸ்பெயினில் இன்று அதிகாலை திருமண விழா ஒன்றில் நடந்த சண்டையில், திருமண விருந்தில் கலந்து கொண்டவர்கள் மீது கார் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை அதிகாரிகள் கைது செய்து, நான்காவது நபரை தேடி வருகின்றனர். மாட்ரிட்டின் வடகிழக்கில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோரெஜோன் டி அர்டோஸில் உள்ள உணவகத்தின் வெளியே இன்று அதிகாலை சண்டை நடந்துள்ளது.
சண்டை ஏற்பட்டதையடுத்து, திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மீது கார் மோதியது. இதுகுறித்து மாட்ரிட் அவசர சேவை பிரிவு தலைவர் கார்லோஸ் போலோ கூறுகையில், "நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, நான்கு பேர் எலும்பு முறிவின் காரணமாக இறந்ததைக் கண்டோம்.
காயமடைந்த மேலும் 4 பேர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் வாகனம், விபத்து நடந்த இடத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அந்த மூவரும், தந்தை மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் என அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்காவது சந்தேக நபரைத் தேடி வருகிறோம்" என்றார்.
திருமண விழாவில் சண்டை ஏற்பட்டதையடுத்து நடந்த விபத்தால், நான்கு பேர் உயிரிழந்திருப்பது அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உணவகத்தின் வெளியே இந்த விபத்து நடந்திருப்பதால் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.
உலகளவில் சாலை விபத்துகளில் அதிக பேர் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான சாலை விபத்துகள் நடைபெறுவதாக மத்திய அரசின் தரவுகள் கூறுகின்றன.
இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட சாலை விபத்துகள் மற்றும் அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைக் கோரி மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் பல அதிர்ச்சி தகவல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு 4 லட்சத்து 64 ஆயிரத்து 910 சாலை விபத்துகளை ஏற்பட்டுள்ளன. அதேபோல் 2018-ல் 4 லட்சத்து 67 ஆயிரத்து 44 விபத்துகளும், 2019-ல் 4 லட்சத்து 49 ஆயிரத்து 2 சாலை விபத்துகளும் இந்தியாவில் ஏற்பட்டுள்ளன.
உலகளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளை எடுத்துக் கொண்டால், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு 2018-ல் 22,11,439 விபத்துகள் நடந்துள்ளன. ஜப்பான் 4,99,232 விபத்துகளுடன் இரண்டாவது இடத்திலும், 4,80,652 விபத்துகளுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டாப் 20 நாடுகளின் பட்டியலில், சீனா, ஈரான், கொரியா, துருக்கி, இத்தாலி, ரஷ்யா, பிரிட்டன், கனடா, இந்தோனேசியா, ஸ்பெயின், மொராக்கோ, பிரேசில், பிரான்ஸ், பெல்ஜியம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவு சாலை விபத்துகள் ஏற்படும் நாடுகளின் பட்டியலில் உள்ளன.