South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கேளிக்கை விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில், 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் ஆப்பரிக்காவின் ஜேகன்னஸ்பர்க் நகருக்கு அருகே, கேளிக்கை விடுதி ஒன்றில் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு - 9 பேர் பலி
தென் ஆப்பிரிக்காவின் கவுதெங் மாகாணம் ஜோகன்னஸ்பர்க் அருகே உள்ள பெக்ஹர்டெல் நகரின் மேற்கே, இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது. அந்த கேளிக்கை விடுதியில், இன்று அதிகாலை வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது, அந்த கேளிக்கை விடுதிக்கு 2 கார்களில் வந்த மர்ம கும்பல், அங்கு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதையடுத்து பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
அப்போது, பலர் மீது குண்டு பாய்ந்தது. அதில், 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சிலருடைய நிலைமை கவலைக்கிட்டமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தப்பிச் சென்ற 12 பேர் கொண்ட கும்பல்
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு காரி தப்பிச்சென்ற 12 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற கும்பல், போகும் வழியிலும் சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே சென்றதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த துப்பாக்கிச் சூட்டில் 12 மர்ம நபர்கள் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பயங்கர துப்பக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட கேளிக்கை விடுதி, சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஆஸ்திரேலியா, இந்த வாரம் தென் ஆப்பிரிக்கா
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது டிசம்பர் 14-ம் தேதி, ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில், யூத மதத்தினரின் 'ஹனுக்கா' எனும் பண்டிக்கை கொண்டாட்டம் நடந்த இடத்தில் புகுந்த இரண்டு பயங்கரவாதிகள், கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
அதேபோல், இந்த வாரமும் ஞாயிற்றுக் கிழமையான இன்று, தென் ஆப்ரிக்காவில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















