Watch Video : ஹாலோவின் பார்ட்டி கூட்ட நெரிசல்..! 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகம்..! தெ.கொரியாவில் சோகம்..
சியோலில் உள்ள ஹாமில்டன் ஹோட்டலுக்கு அருகிலுள்ள ஒரு குறுகிய சந்தில் ஒரு பெரிய கூட்டம் முன்னோக்கி தள்ளத் தொடங்கிய பின்னர் 400க்கு மேற்பட்ட மக்கள் நசுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சியோலின் இடாவோனில் ஹாலோவீன் பார்ட்டிகளில் கூட்டம் அலைமோதியதில் குறைந்தது 120 பேர் உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
நெரிசலில் சிக்கி பலர் உயிரிழப்பு
அவசரநிலை அதிகாரிகளின் கண்ட்ரோல் ரூமுக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளதாக குறைந்தது 81 அழைப்புகள் வந்ததாக தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சியோலின் யோங்சன் தீயணைப்புத் துறையின் தலைவர், சோய் சியோங்-பீம், நேற்று இரவு இடாவோனில் ஏற்பட்ட நெரிசலைத் தொடர்ந்து சியோல் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை கொண்டு சென்றதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறினார். இறந்தவர்களில் 13 பேர் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும், மீதமுள்ள 46 பேரின் உடல்கள் இன்னும் தெருக்களில் உள்ளன என்றும் சோய் கூறினார்.
சாலையெங்கும் ஆம்புலன்ஸ்
சியோலில் உள்ள ஹாமில்டன் ஹோட்டலுக்கு அருகிலுள்ள ஒரு குறுகிய சந்தில் ஒரு பெரிய கூட்டம் முன்னோக்கி தள்ளத் தொடங்கிய பின்னர் 400க்கு மேற்பட்ட மக்கள் நசுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாடு முழுவதிலும் இருந்து 140 ஆம்புலன்ஸ் வாகனங்கள், அவசர கால பணியாளர்கள், சியோலில் உள்ள அனைத்து பணியாளர்கள் உட்பட பலர், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தெருக்களில் நிறுத்தப்பட்டனர். நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் இன்னும் துல்லியமாக கண்டறிய முயன்று வருகின்றனர். ஆனால் இதுவரை வெளியிடப்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்: சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் - திடீரென அறிவித்த கருணாஸ்..! நடந்தது என்ன..?
விடியோவில்
டிவி காட்சிகள் மற்றும் சமூக வலைதள வீடியோக்கள் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரிசையாக நிற்பதைக் காட்டியது. காயமடைந்தவர்களை ஸ்ட்ரெச்சர்களில் கொண்டு செல்லும் அவசரகால பணியாளர்கள் மற்றும் பாதசாரிகள் தெருக்களில் கிடக்கும் மக்களுக்கு CPR செய்வதையும் காண முடிந்தது. காயமடைந்தவர்களில் பலர் மஞ்சள் போர்வைகளால் மூடப்பட்டிருப்பதை விடியோவில் காணலாம்.
충격주의)현재 이태원 압사 사망자 발생했다는듯 pic.twitter.com/ExGTyJQQN9
— 이것저것 소식들 (@feedforyou11) October 29, 2022
உடனடி நடவடிக்கை
ஹாலோவீன் விழாக்களுக்காக மக்கள் கூட்டம் கூடியிருந்த இடவோனின் தெருக்களில் நெரிசல் ஏற்பட்டதாக தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார். சம்பவம் குறித்த விவரங்கள் இன்னும் விசாரணையில் உள்ளதாகக் அவர் மேலும் கூறினார். யாரோ ஒரு பிரபலம் ஒருவர் அங்கு வந்து சென்றதைக் கேள்விப்பட்டு ஏராளமான மக்கள் இட்டாவோனில் உள்ள மதுக்கடைக்கு விரைந்ததையடுத்து இந்த விபத்து நடந்ததாக சில உள்ளூர் ஊடகங்கள் முன்பு தெரிவித்தன. தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல், காயமடைந்தவர்களுக்கு விரைவான சிகிச்சையை அளிக்க அதிகாரிகளை முடுக்கிவிட்டார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பேரிடர் மருத்துவ உதவிக் குழுக்கள் மற்றும் பாதுகாப்பான படுக்கைகளை அருகில் உள்ள மருத்துவமனையில் விரைவாக நிலைநிறுத்துமாறு அவர் சுகாதார அமைச்சகத்திற்கு அறிவுறுத்தினார். உள்ளூர் ஊடகங்கள் கூறுகையில், ஹாலோவீன் விழாக்களுக்காக சுமார் 1,00,000 மக்கள் இடவோன் தெருக்களில் குவிந்தனர் என்றும், இது கொரோனா கட்டுப்பாடுகள் தகர்த்தப்பட்டப் பிறகு மிகவஹ் பெரிய கூட்டம் என்று குறிப்பிட்டனர்.