Srilanka Crisis : மகிந்த ராஜபக்சே கடற்படை தளத்திற்கு அழைத்து சென்றது ஏன்? பாதுகாப்புத்துறை செயலாளர் விளக்கம்!
இலங்கையில் நிலைமை சீரானதும் மகிந்த ராஜபக்சே விரும்பும் இடத்திற்கு அழைத்து செல்லப்படுவார் என்று பாதுகாப்புத்துறை செயலாளர் கமல் குணரத்னே விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் பாதுக்காப்பிற்காக திரிகோணமலை கடற்படை தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை செயலாளர் கமல் குணரத்னே விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்சேவின் அதிகாரபூர்வ இல்லம் தாக்கப்பட்டத்தை தொடர்ந்து அவரை கடற்படை தளத்திற்கு அழைத்து சென்றோம்.
இலங்கையில் நிலைமை சீரானதும் மகிந்த ராஜபக்சே விரும்பும் இடத்திற்கு அழைத்து செல்லப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வெடித்த வன்முறையைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவரும் நாட்டை விட்டு தப்பி ஓட முயற்சித்து வருகின்றனர். மஹிந்த ராஜபக்சே நேற்று காலை பிரதமர் மாளிகையில் இருந்து பலத்த ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறிய நிலையில், அவரது மகன் நமல் ராஜபக்சேவின் மனைவி லிமிஷா வீரசிங்கே நேற்று தனது வீட்டில் இருந்து தப்பி ஓடினர்.
இலங்கை: ராஜபக்ச குடும்பத்தினர் தப்பியோடும் வீடியோ காட்சிhttps://t.co/wupaoCQKa2 | #SriLanka #SriLankaProtests #SrilankanCrisis #Rajapaksa pic.twitter.com/ohpf0oKCKO
— ABP Nadu (@abpnadu) May 10, 2022
இலங்கையில் அமைந்துள்ள கோத்தபய ராஜபக்சேவின் அரசுக்கு எதிராக அறவழியில் அமைதியாக போராடிய மக்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதலை நடத்தத் தொடங்கினார். இதனால், மக்களின் கோபத்திற்கு இலங்கை அரசு ஆளாகியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்