Twitter One-Word Trend : அது என்னப்பா ஒரு வார்த்தை..? சச்சின் முதல் பைடன் வரை ட்விட்டரில் படையெடுத்த சம்பவம்.!
One-Word Trend : பல ட்விட்டர் வாசிகள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தங்களது மனதிற்கு தோன்றிய ஒரு வார்த்தையை பதிவிட்டு வருகின்றனர்.
ட்விட்டரில் புதிதாக ’ஒரு வார்த்தை’ என்ற ட்வீட்கள் அதிகளவில் ட்ரெண்டாகி வருகிறது. இதனை முதலில் தொடங்கி வைத்தது சி.என்.என் செய்தி நிறுவனம்தான். நேற்று மாலை சி.என்.என் செய்தி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ’ப்ரேக்கிங் செய்தி’ என்ற ஒரு வார்த்தையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது.
அதனை தொடர்ந்து, பல ட்விட்டர் வாசிகள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தங்களது மனதிற்கு தோன்றிய ஒரு வார்த்தையை பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரு வார்த்தையை (ஒன் வேர்ட்) அவர்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
View this post on Instagram
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், "கிரிக்கெட்" என்ற ஒற்றை வார்த்தையை பதிவிட்டுள்ளார்.
cricket
— Sachin Tendulkar (@sachin_rt) September 2, 2022
அதேபோல், நீங்கள் சமீபத்தில் ட்விட்டரைப் பார்த்திருந்தால், அதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ’ஜனநாயகம்' என பதிவிட்டுள்ளார்.
democracy
— President Biden (@POTUS) September 2, 2022
universe
— NASA (@NASA) September 1, 2022
Revolution
— French Embassy U.S. (@franceintheus) September 1, 2022
தொடர்ந்து நாசா தனது ட்விட்டரில் ’யுனிவர்ஸ்’ என்றும், பிரெஞ்சு தூதரகம் யு.எஸ். ‘புரட்சி’ என்றும் பதிவிட்டுள்ளது.
தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இன்று எடப்பாடி பழனிசாமிக்கு சாதமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதை தொடர்ந்து, அதிமுக தனது ட்விட்டர் பக்கத்தில் ’எடப்பாடியார்’ என்று பதிவிட்டிருந்தது.
View this post on Instagram
அதேபோல், திமுக ஐடி விங் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘திராவிடம்’ என்று பதிவிட்டிருந்தது.
திராவிடம்
— DMK IT WING (@DMKITwing) September 2, 2022