(Source: Poll of Polls)
Google Russia: கூகுள் நிறுவனத்திற்கு ரூ.400 கோடி அபராதம் - ரத்து செய்ய ரஷ்ய நீதிமன்றம் மறுப்பு
Google Russia: கூகுள் நிறுவனத்திற்கு விதித்த 400 கோடி ரூபாய் அபராதத்தை ரத்து செய்ய, ரஷ்ய நீதிமன்றம் மறுத்துள்ளது.
Google Russia: உக்ரைன் போர் தொடர்பான தவறான செய்திகளை பரப்பியதாக, 49.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கூகுள் நிறுவனத்திற்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்திற்கு ரூ.400 கோடி அபராதம்:
உக்ரைன் போர் பற்றிய போலித் தகவல் என்று ரஷ்யா கருதுவதை நீக்கத் தவறியதற்காக, கூகுள் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 400 கோடி ரூபார் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் வழக்கு தொடர்ந்து. ஆனால், அபராதத்தை ரத்து செய்யக்கோரிய கூகுள் நிறுவனத்தின் கோரிக்கையை ரஷ்ய நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக கூகுள் நிறுவனம் தரப்பிலிருந்து, எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
உக்ரைன் - ரஷ்யா போர்:
உக்ரைன் - ரஷ்யா போர் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீவிரமடைந்தது. அததொடர்ந்து வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் வெள்யிடும் தரவுகள், தகவல்கள், செய்திகள் மற்றும் சென்சார்ஷிப் ஆகியவற்றில் பெரும்பாலும் முரண்பட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீதான போர் தொடர்பாக தவறான செய்திகளை வெளியிட்டதாக, கூகுள் நிறுவனத்திற்கு டகான்ஸ்கை மாவட்ட நீதிமன்றம் அபராதம். ஆனால், எதிர்த்து மாஸ்கோ நகர நீதிமன்றத்தில் கூகுள் மேல்முறையீடு செய்தது. அந்த மனு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.
டிசம்பரின் பிற்பகுதியில் அறிவிக்கப்பட்ட அபராதம், ரஷ்யாவில் கூகுளின் வருடாந்திர வருவாயின் ஒரு பங்காக கணக்கிடப்பட்டுள்ளதுது. முன்னதாக 2021 இன் பிற்பகுதியில் 7.2 பில்லியன் ரூபிளும், ஆகஸ்ட் 2022-இல் 21.1 பில்லியன் ரூபிளும் கூகுள் நிறுவனத்திற்கு அபராதமாக விதிக்கப்பட்டது. அதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் அதிரடி நடவடிக்கைகள்:
தீவிரவாத உள்ளடக்கத்தை அகற்ற கூகுள் தவறியதற்காகவும், LGBT தொடர்பான ரஷ்யாவின் நிலைப்பாடு தொடர்பாக ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து தவறான செய்திகளை வெளியிட்டதாகவும் அந்நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதாக ரஷ்யா ஊடகங்கள் தெரிவித்தன. ஆல்பாபெட்டின் குழுமத்தின் யூடியூப் ரஷ்ய அரசின் கோபத்திற்கு ஒரு குறிப்பிட்ட இலக்காக உள்ளது. ஆனால் ட்விட்டர் மற்றும் மெட்டாவின் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை போன்று , கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யாவில் இதுவரை எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா மட்டுமின்றி ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும், கூகுள் ந்றுவனம் தொடர்ந்து வழக்குகளில் சிக்கி அபராதம் செலுத்தி வருகிறது. வ்திகளை மீறுதல், பயனாளர்களின் தரவுகள் கசிவது என பல்வேறு குற்றச்சாட்டுகள் கூகுள் நிறுவனம் மீது தொடர்கிறது.