Putin Slams Europe: "என்ன மனநிலை இது?" இந்தியா, சீனா மீது ஐரோப்பாவின் தடைகள்! மீண்டும் இறங்கி பேசிய புதின் புடின்
இது காலனித்துவ மனநிலை என இந்திய மற்றும் சீனாவுக்கு எதிரான ஐரோப்பாவின் தடைகளை அதிபர் பிளாடிமிர் புடின் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் பொருளாதார நண்பர்களான இந்தியா, சீனாவை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட ஐரோப்பாவின் பொருளாதாரத் தடைகள் திட்டங்களை “காலாவதியான காலனித்துவ மனநிலை” என கடுமையாக விமர்சித்துள்ளார்.
"காலனித்துவ மனநிலை பிரதிபலிப்பு" – புடின்
சீனாவுக்கு நான்கு நாள் பயணத்தைத் தொடர்ந்து ஊடகங்களைச் சந்தித்த புடின், "கிட்டத்தட்ட 1.5 பில்லியன் மக்களைக் கொண்ட இந்தியா, சீனா போன்ற சக்திவாய்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் உங்களிடம் உள்ளன, ஆனால் அவற்றுக்கும் அவற்றின் சொந்த உள்நாட்டு அரசியல் வழிமுறைகள் மற்றும் சட்டங்கள் உள்ளன. எனவே யாராவது உங்களைத் தண்டிக்கப் போகிறார்கள் என்று உங்களிடம் கூறும்போது, அந்த நாடுகளின் தலைமை, அந்த பெரிய நாடுகள், அவர்களின் வரலாற்றில் கடினமான காலகட்டங்களைக் கொண்டிருந்தன, அவை காலனித்துவத்துடன் தொடர்புடையவை, நீண்ட காலமாக அவர்களின் இறையாண்மையின் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடையவை, அவர்களில் ஒருவர் பலவீனத்தைக் காட்டினால், அவரது அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், எனவே அது அவரது நடத்தையை பாதிக்கிறது. காலனித்துவ சகாப்தம் இப்போது முடிந்துவிட்டதைப் போலவே, தங்கள் கூட்டாளிகளுடன் பேசும்போது இந்த வார்த்தையைப் பயன்படுத்த முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும்," என்று புடின் கூறினார்.
"உக்ரைன் வெறும் சாக்குப்போக்கு"
ஐரோப்பா மேற்கொண்டுள்ள புதிய தண்டனை நடவடிக்கைகள் உக்ரைன் நிலைமையோடு எந்த தொடர்பும் இல்லை என்றும் புடின் வாதிட்டார்.
“உக்ரைன் பிரச்சனை வெறும் சாக்குப்போக்கு. உண்மையில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வேறு நோக்கங்களுக்காகவே இத்தகைய தடைகள் விதிக்கப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.
"பேச்சுவார்த்தை வழியே தீர்வு"
பதற்றம் நிலவினாலும், ஒரு இராஜதந்திர தீர்வை எதிர்பார்ப்பதாக புடின் தெரிவித்தார்.
“இறுதியில் விஷயங்கள் சரியாகிவிடும். மீண்டும் சாதாரண அரசியல் உரையாடலைக் காண்போம்,” என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அமெரிக்காவின் நடவடிக்கைகள் மீது குற்றச்சாட்டு
உக்ரைன் மோதலை முன்னிட்டு விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் உண்மையில் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலின் விளைவுதான் என்றும் புடின் குற்றஞ்சாட்டினார்.
“உக்ரைனுக்கும் பிரேசில் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளுக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமில்லை. இது வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் குறித்த அமெரிக்க உள்நாட்டு அரசியலின் விளைவு மட்டுமே,” என்றார்.
இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக பதற்றம்
இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருப்பது, புது தில்லிக்கு பெரும் சவாலாக உள்ளது. அதோடு ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கும் கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
இது உக்ரைன் போரில் மாஸ்கோவின் முயற்சிகளுக்கு உதவுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருப்பதையும் புடின் மறுத்தார்.






















