PM Modi US Visit: ஐ.நாவில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி.. 4 நாள் பயண திட்டம் என்ன?
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐ.நா சபையில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியை பிரதமர் மோடி தலைமை தாங்கி கலந்துகொள்கிறார்.
![PM Modi US Visit: ஐ.நாவில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி.. 4 நாள் பயண திட்டம் என்ன? Prime Minister Modi will preside over the yoga program held at the UN Assembly on the occasion of International Yoga Day. PM Modi US Visit: ஐ.நாவில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி.. 4 நாள் பயண திட்டம் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/21/590055844c70f81d947a31cdb8102e921687314444042589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அரசு முறை பயணமாக, பிரதமர் மோடி நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டின் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடியின் இந்த பயணம் அமைந்துள்ளது. நேற்று டிவிட்டர், ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் அதிபருமான எலான் மஸ்கை சந்தித்து பேசினார்.
இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐ.நா சபையில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியை தலைமை தாங்கி கலந்துகொள்கிறார். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சில யோகாசனங்களையும் செய்வார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை முடித்து நாளை வாஷிங்டன் செல்கிறார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகள் - பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டும், கட்சி சார்பற்று, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இரண்டு முறை உரையாற்ற உள்ள முதல் இந்தியப் பிரதமர் மோடிதான்.
இரு நாட்டின் ஆழமான நெருக்கமான உறவை மீண்டும் உறுதி செய்யும் நிகழ்வாக மோடியின் உரை அமையும் என வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, கூட்டு நாடாளுமன்ற அமர்வில் உரையாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மோடி அனுப்பிய பதில் கடிதத்தில், "ஜனநாயக விழுமியங்கள், இரு நாட்டு மக்களிடையே உள்ள நெருக்கமான உறவுகள், உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கான உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமெரிக்காவுடன் உலகளாவிய வியூக ரீதியான கூட்டணி கொள்வதில் பெருமை" என குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து நாளை மாலை அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மனி ஜின் பைடனும் இணைந்து சிறப்பு விருந்தளிக்கின்றனர்.
ஜூன் 23 அன்று, பிரதமர் மோடிக்கு துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் மாநிலச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் இணைந்து மதிய விருந்து அளிக்கின்றனர். பின் தலைமை நிர்வாக அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடனும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். ஜூன் 23 மாலை ரொனால்ட் ரீகன் மையத்தில் நடைபெறும் மெகா நிகழ்வில் அவர் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றுவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பயணத்திற்குப் பிறகு, பிரதமர் மோடி எகிப்து சென்று அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசியை சந்தித்து இரு தரப்புக்கும் இடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் ரீதியாக சந்திப்பு நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் முதல் எகிப்து பயணம் இதுவாகும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)