Mummy: ‘அவள் என் காதலி’...800 ஆண்டுகள் பழமையான மம்மியை வைத்து சுற்றி திரிந்த நபர் - அதிர்ந்த போலீஸ்
உணவு டெலிவரி பையில் 800 ஆண்டுகள் பழமையான மம்மியை போலீசார் பறிமுதல் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Mummy : உணவு டெலிவரி பையில் 800 ஆண்டுகள் பழமையான மம்மியை போலீசார் பறிமுதல் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மம்மி
மம்மி என்பது முந்தைய காலக் கட்டத்தில் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். சில வேதிப்பொருட்களாலும், குளிர்ந்த பகுதிகளிலும் இந்த சடலங்கள் பாதுகாக்கப்படும். காலத்தால் அழியாத மனித சடலங்களை உலகமெங்கும் அகழ்வாராட்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளிலேயே மிகவும் பழமையானது 1940ஆம் ஆண்டு தென் அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்டது. 1940ல் கண்டெடுக்கப்பட்ட மம்மிகள் 9400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் என்று கூறப்படுகிறது.
மம்மியுடன் சுற்றி திரிந்த நபர்
இந்நிலையில், ஒருவர் மம்மியுடன் நீண்ட நாட்களுக்கு வாழ்ந்து வந்துள்ளார். அதன்படி, பெரு நாட்டைச் சேர்ந்தவர் ஜூலியோ பெர்மேஜோ (26). இவர் அதே பகுதியில் உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுடைய நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். இந்நிலையில், அவர் மம்மி வைத்திருப்பது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜூலியோ பெர்மேஜோ வைத்திருந்த உணவு டெலிவரி பையை சோதனை செய்தனர்.
சோதனையில் அவர் வைத்திருந்த பையில் மம்மி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர் வைத்திருந்த பையை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில், ஜூலியோ சீசர் பெர்மேஜோ என்ற இளைஞர் அவர் வைத்திருந்த மம்மி தனக்கு நெருங்கிய உறவினர் என்று கூறினார். மேலும், அந்த மம்மி தன் காதலி என்றும் அவருக்கு ஜிவானிடா என்று பெயரும் வைத்திருப்பதாகவும் கூறினார். அவர் எப்போதும் தன்னுடன் இருக்கிறாள். அவளுடன் உறங்குவதாகவும் தெரிவித்தார்.
இதனை அடுத்து, அவரை கைது செய்து அவர் வைத்திருந்த மம்மியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. இந்த மம்மி கலாச்சார அமைச்சகத்தின் கூற்றுப்படி, ”ஹிஸ்பானிக் முந்தை காலத்தில் லிமாவிலிருந்து தென்கிழக்கே சுமார் 1,300 கிலோமீட்டர்கள் (800 மைல்கள்) தொலைவில் உள்ள பெருவியன் ஆண்டிஸில் உள்ள ஒரு பகுதியான புனோவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண் நபரின் உடல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மம்மி குறைந்தது 45 வயதுடைய ஒரு மனிதனின் சடலம் என்று கூறப்படுகிறது. மேலும், மம்மி பண்டைய கால பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியத்திற்கு எடுத்து செல்லப்பட உள்ளதாக பெரு அரசு தெரிவித்துள்ளது.
தனது அடுத்த விண்வெளி வீரர்களை தேர்வு செய்துள்ள ஜப்பான்: நிலாவுக்கு மனிதர்களை அனுப்பத் திட்டம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்