ஒற்றை சிங்கமாய் முழங்கி கெத்தாய் நின்ற பெண் போலீஸ்.. தாக்குதலை நிறுத்தி ஓடிய ரவுடி கும்பல்!
ஒரு கும்பல் தாக்குதலில் சிக்கிக்கொண்ட ஆதரவற்ற 20 வயது இளைஞனை ஒரு பெண் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு கும்பல் தாக்குதலில் சிக்கிக்கொண்ட ஆதரவற்ற 20 வயது இளைஞனை ஒரு பெண் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பென்சில்வேனியா நாட்டை சேர்ந்த போலீஸ் அதிகாரியான கிளேர் லார்கி-ஜோன்ஸ் என்ற 48 வயதுமிக்க பெண் இரவில் தனது 11 மணி நேரப் பணியை முடித்துவிட்டு கேர்னார்ஃபோன் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பெரிய கும்பல் ஒன்று ஒரு இளைஞரை பிடித்து தாக்கியுள்ளனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் உடனடியாக தனது காரில் இருந்து இறங்கி, தாக்குதல் நடத்திய கும்பலுக்கு இடையில் சென்று, பாதிக்கப்பட்ட 20 வயது இளைஞரை வெளியே இழுத்து காப்பாற்றியுள்ளார். மேலும், அந்த பெண் கும்பல் தலைவரை விரைவாக அடையாளம் கண்டு அவரை மிரட்டி பாதிக்கப்பட்டவரை பாதுகாப்பாக இழுத்துச் சென்றதாக தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க : Watch Video : துருக்கியில் இரு வேறு பகுதிகளில் கோர விபத்து.! 32 பேர் பரிதாப உயிரிழப்பு.!
இதுகுறித்து அந்த பெண் தெரிவிக்கையில், “ நான் 11 மணி நேர ஷிப்டை முடித்துவிட்டு, வீட்டிற்குச் செல்வதற்கு முன்பாக என் சகோதரனையும் அவனது காதலியையும் கேர்னார்ஃபோனில் உள்ள தி மேஸில் விடுவதற்காக சென்றேன். அப்போது ஒரு கும்பல் ஒரு இளைஞரை தாக்குவதை கண்டேன். நான் என் சகோதரனை காரில் இருக்கச் சொன்னேன், நான் நடந்து சென்று அந்த கூட்டத்தின் தலைவரை அடையாளம் கண்டு சத்தமிட்டதால் கூட்டம் கலைந்து ஓடியது. அதற்கிடையில் தாக்கப்பட்ட இளைஞரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுத்தேன்.
அங்கு ஏதோ சரியாக நடக்கவில்லை என்று எனக்குத் தெரிந்தது. அது என் பையன் வயதில் ஒருவன் தாக்கப்பட்டதை தடுக்கவே செய்தே. எனது வயதில் உள்ள அம்மாக்கள் யார் அந்த இடத்தில் இருந்தாலும் அதை தான் செய்வார்கள். அந்த நேரத்தில் நான் சத்தியமாக எதையும் நினைக்கவில்லை. மக்கள் துன்புறுத்தப்படுவதைப் பார்ப்பது எனக்குப் பிடிக்கவில்லை. நான் ஏன் இதைச் செய்தேன் என்று என் கணவர் என்னிடம் கேட்டார் “ என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க : India Economic Growth: தொடரும் உலகளாவிய அதிர்வுகள்...நீடித்த வளர்ச்சியில் இந்தியா பொருளாதாரம்...ரிசர்வ் வங்கி விளக்கம்
போலீஸ் அதிகாரி கிளேரின் துணிச்சலான செயலுக்கு நீதிமன்றத்தின் நீதிபதி நிக்கோலா ஜோன்ஸால் பாராட்டினார். மேலும், காவல்துறை கூட்டமைப்பு சார்பில் கிளேர் லார்கி-ஜோன்ஸ் துணிச்சலான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
நீதிபதி நிக்கோலா ஜோன்ஸ் பாராட்டுகையில், “அதிர்ஷ்டவசமாக, பிசி கிளேர் லார்கி-ஜோன்ஸ், அன்று மாலை பணியில் இருந்து, தனது சொந்த பாதுகாப்பைப் பற்றி சிந்திக்காமல், ஒழுங்கை மீட்டெடுப்பதை மட்டுமே தெளிவாக இருந்தார்.
மேலும் படிக்க : AsiaCup 2022: ஆசிய கோப்பைக்கான அணிகள் தயார்.. கோப்பையை வெல்ல எந்த அணிக்கு வாய்ப்பு!
மேலும் தாக்குதல் நடத்திய கும்பல் தலைவர் கால்ம் லீ டேவிஸ் குறித்து தகவல் தெரிவித்து சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீஸ் அதிகாரியான கிளேர் லார்கி-ஜோன்ஸ், கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறையில் அனுபவம் பெற்றவர். நார்த் வேல்ஸ் காவல்துறையின் பாலியல் குற்றங்கள் தொடர்பான அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.