Watch Video | சிசிடிவி கேமராவுடன் கண்ணாமூச்சி ரேரே.. விளையாடிய கிளி; வீடியோ வைரல்!
வீடியோவில் ஒரு கிளி சாலை பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவுடன் கண்ணாமூச்சி விளையாடிய காட்சி பதிவாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் நிறைந்துள்ளன, அவை பார்க்கும் மக்களை மகிழ்விக்க தவறியதே இல்லை. அவற்றுள் நெட்டிசன்களை ஆச்சர்யப்படுத்தும், அதிசயிக்க செய்யும், 'அட' என நினைக்க செய்யும் அல்லது மனமுருக வைக்கும் வேடிக்கையான வீடியோக்கள் பல மக்களால் அடிக்கடி சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. அதையெல்லாம் தாண்டி சில விடியோக்களில் பெரிய விஷயங்கள் எதுவுமே இல்லாமல் பார்ப்பதற்கு ஒரு அழகு இருக்கிறது என்பதற்காக வைரல் ஆகும் வீடியோக்கள் ஏராளம்.
அதேபோல் தான் பிரேசிலில் டிராஃபிக் கேமராவில் கிளி ஒன்று கண்ணாமூச்சி விளையாடுவதைப் பதிவு செய்த சமீபத்திய வீடியோ வைரலாகி உள்ளது. தெற்கு பிரேசிலிய மாநிலமான பரனாவில் உள்ள குரிடிபாவில், டர்க்கைஸ்-ஃப்ரன்ட் அமேசான் கிளி, பறந்து களைத்துப்போய் ஓய்வெடுக்க வந்து அமர்ந்தது, அமர்ந்த இடத்தில் ஒரு மின்னணு சாதனத்தைக் கண்டுபிடித்த பிறகு கிளிக்கு ஆர்வம் அதிகரித்தது. நகரத்திற்கு அருகே பிஸியான BR-116 சாலையை பார்த்தபடி பின்னால் வாகனங்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்க ஒரு கிளி ஆசுவாசமாக கேமராவை பார்த்துக்கொண்டு இருந்தது
🦜🦜 Sextou! Na manhã de hoje (29), recebemos uma visita para lá de especial em uma das câmeras do nosso circuito de CFTV, no km 115 da BR-116/PR, em Curitiba. A espécie foi identificada como um papagaio - nome científico amazona aestiva. Só de olho 👀 pic.twitter.com/UwKHeaT8E1
— Arteris Planalto Sul (@Arteris_APS) October 29, 2021
சாலை மேலாண்மை நிறுவனமான ஆர்டெரிஸ் பிளானால்டோ சல் ட்விட்டரில் இந்த சிறிய வீடியோ கிளிப்பைப் பகிர்ந்து இருந்தனர், இந்த கிளி தொடர்ந்து கேமரா லென்ஸின் முன் தலையை நீட்டி நீட்டி செல்லும் கார்களை காணவிடாமல் மறைத்திருக்கிறது. இந்த வீடியோ 2.66 லட்சத்திற்கும் அதிகமான வியூவ்ஸ் பெற்று சுமார் 500 லைக்குகளையும் பெற்றுள்ளது. கிளியின் விளையாட்டுத்தனமான செயல்களால் நெட்டிசன்கள் கவரப்பட்டாலும், லத்தீன் அமெரிக்க நாட்டின் சாலையோரங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் முன் நின்று பறவைகள் விளையாடுவது இது முதன்முறை அல்ல. முன்னதாக, ஏப்ரல் மாதத்தில், சாவ் பாலோவின் காம்பினாஸ் அருகே போக்குவரத்து சிக்னலில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இரண்டு தூக்கான் பறவைகள் தங்கள் அலகுகளால் குத்துவதை காண முடிந்தது. இரு பறவைகளும் கேமராவை பழமென நினைத்து சாப்பிட முயன்றனர், அவர்கள் அந்த மின்னணு சாதனத்தை கடிப்பதை விடியோ காட்சிகள் காண்பிக்கின்றன.
View this post on Instagram
முன்னதாக, கூகபுரா பறவையின் சத்தத்தை கொண்ட மற்றொரு அழகான வீடியோ இணையத்தில் வெளிவந்தது. இந்த வீடியோவை சான் டியாகோ உயிரியல் பூங்காவின் அதிகாரப்பூர்வ பக்கம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது. நெட்டிசன்களை ஈர்த்த அந்த வீடியோவில் கூகபுரா ஏற்படுத்திய ஒலியை அதை கேட்ட எவராலும் புகழாமல் இருக்க முடியாது. அதனை பகிர்ந்து சான் டியாகோ உயிரியல் பூங்கா, "கூக்கபுராஸ், எஞ்சினை ஸ்டார்ட் செய்யுங்கள்" என்ற தலைப்புடன் வீடியோவைப் பகிர்ந்துள்ளது. பறவை ஒலி எழுப்பும் வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது. வீடியோவில், பறவை ஒரு நபரின் கையில் அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது மற்றும் பறவை ஒலி எழுப்புவதை நிறுத்தியதும், பின்னணியில் ஒரு நபர் "குட் ஜாப்" என்று சொல்வது கேட்கிறது. இந்த வீடியோ 1.15 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளதுடன், மக்களிடமிருந்து பல கமெண்டுகளையும் பெற்றுள்ளது.