மேலும் அறிய

Pakistan Coal Mine Clash : பாகிஸ்தானில் சோகம்... இருதரப்பினருக்கிடையே பயங்கர மோதல்...16 பேர் உயிரிழப்பு...!

பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pakistan Coal Mine Clash : பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது, கடந்த ஆண்டும் ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. பல்வேறு எதிர்புகளுக்கு மத்தியில் அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இம்ரான் கான் பதவி விலகினார். தற்போது பாகிஸ்தான் முஸ்லீம் லிக் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தானில் இக்கட்டான சூழல் நிலவி வருகிறது.  ஒரு பக்கம் அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்கான் கைது செய்யப்பட்டது அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் என்றும் அவரை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.  இதனை அடுத்து, இம்ரான் கானுக்கு பிணை வழங்கி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இது ஒருபக்கம் இருக்க, மற்றொரு பக்கம்  விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் பாகிஸ்தான் நாடு திணறி வருகிறது. ஒரு வேளை உணவிற்கே நடுத்தர மற்றும் கீழ்தட்டில் இருக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இப்படி இருக்கும் சூழ்நிலையில், தற்போது ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது.

16 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் வடமேற்கு பிராந்தியத்தில் நிலக்கரி சுரங்கப்பாதை எல்லை நிர்ணயம் செய்வதில் நேற்று சன்னி கேல் மற்றும் ஜர்குன் கேல் என்ற இரு சமூகத்தினருக்கு இடையே சண்டை ஏற்பட்டது. சுரங்க எல்லை நிர்ணயம் தொடர்பாக கோஹட் மாவட்டத்தில் பெஷாரில் இருந்து தென்மேற்கே 35 கி.மீ தொலைவில் உள்ள தர்ரா ஆடம் கெக் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் இருதரப்பினர் இடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வன்முறையில் காயமடைந்தவர்களை மீட்டு பெஷாஷர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போதை வரை வெளியாகவில்லை. ஆனால் துப்பாக்கிச் சண்டையில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக தர்ரா ஆதம் கேல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  நிலக்கரி சுரங்கங்களை பிரித்துக் கொள்வதில் 2 குழுவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நிலக்கரி சுரங்கத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பாக சன்னிகேல் மற்றும் ஜர்குன் கேல் பழங்குடியினருக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகள் மோதல் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget