Nithyananda LIVE: இனி நீங்க புது நித்யானந்தாவை பார்ப்பீங்க... புதிய கைலாசாவை பாப்பீங்க... அதிரடியாக அறிவித்தார்!
Nithyananda LIVE Updates: மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நித்தியானந்தா தனது யூடியூப்பில் லைவ் வருகிறார். அது குறித்தான அப்டேட்டுகளை இங்கு பார்க்கலாம்.
LIVE
Background
Nithyananda LIVE Updates: மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நித்தியானந்தா தனது யூடியூப்பில் லைவ் வருகிறார். அது குறித்தான அப்டேட்டுகளை இங்கு பார்க்கலாம்.
இன்னும் என் சமாதி நிலை முடியவில்லை
நீங்கள் செய்த அனைத்து நல்ல விஷயங்களுக்கும் நன்றி. ஆகஸ்ட் முதல் வாரத்தில் பரமஷிய யோகத்தை தள்ளி வைத்தற்கு காரணம் இன்னும் எனது சமாதி நிலை முடியவில்லை. உங்களின் பொறுமைக்கு நன்றி.
அடுத்த அமாவாசையில் லெவல் 3 தொடங்கும்
அடுத்த அமாவாசையில் பரமஷிய யோகம் லெவல் 3 தொடங்க இருக்கிறோம்.
நிச்சயம் தமிழில் பேசுகிறேன்
மனம் தற்காலிகமானது. யாராவது நான் தமிழில் பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களா.. நான் நிச்சயம் இன்னும் சில நிமிடங்களில் தமிழில் பேசுகிறேன்.
உடல் அழியும் போது வாழ்வு வீணாகி போகிறது- நித்தி
நன்றாக புரிந்து கொள்ளுங்கள், மனம் அதிக முறை உயிரிழக்கும் போது, அதுதான் நீங்கள் உங்களது உடலை சரியாக பயன்படுத்தும் முறையாக இருக்கிறது. மாறாக, ஒரே மனம் இருந்து, உடல் அதிக முறை அழியும் போது, உங்களது வாழ்வு வீணாகி போகிறது.
தமிழில் பேச போவதாக நித்யானந்தா அறிவிப்பு
இதுவரை ஆங்கிலத்தில் ஆசி வழங்கி வந்த நித்யானந்தா, தற்போது தமிழில் பேசப் போவதாக அறிவித்துள்ளார்