மேலும் அறிய

Ranil Wickremesinghe : ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள 9 அமைச்சர்களின் பின்னணி இதோ..

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றார்

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்கிரம சிங்கே பொறுப்பேற்றார். இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி தினேஷ் குணவர்தன, ஜீ.எல்.பெரிஸ், காஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இடைக்கால அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இந்த நிலையில் கூடுதலாக 9 புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச பதவி பிரமாணம் செய்துள்ளார். 

1. நிமல் சிறிபால டி சில்வா - துறைமுகம், கப்பல்துறை மற்றும் விமான  சேவைகள் அமைச்சர்

Ranil Wickremesinghe : ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள 9 அமைச்சர்களின் பின்னணி இதோ..

பௌத்த மதத்தை சேர்ந்த நிமல் சிறிபால டி சில்வா ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்துவருகிறார். ஊடகவியலாளரான இவர், 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் 14-வது பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வானார். முன்னதாக 1989, 1994, 2000, 2004, 2015ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த 2015-ஆம் ஆண்டு போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். நீர்வளம் மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு 

2. சுசில் பிரேமஜயந்த - கல்வி அமைச்சர்

Ranil Wickremesinghe : ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள 9 அமைச்சர்களின் பின்னணி இதோ..

பௌத்த மதத்தை சேர்ந்த  சுசில் பிரேமஜயந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த இவர் வழக்கறிஞராகவும்  பணியாற்றி உள்ளார். 2000, 2001, 2004, 2015 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இவர். இலங்கையில் நடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் கொழும்பில் இருந்து மக்களால் தேர்வு செய்யப்பட்டு பெட்ரோலியத்துறை அமைச்சராக பணியாற்றினார். கடந்த 2015ஆம் ஆண்டு தொழில்நுட்பத்துறை அமைச்சராக பணியாற்றிய அனுபவுமும் இவருக்கு உண்டு. 

3. கெஹெலிய ரம்புக்வெல்ல- சுகாதார அமைச்சர்

Ranil Wickremesinghe : ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள 9 அமைச்சர்களின் பின்னணி இதோ..

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த 2010 ஆண்டு கண்டியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வானவர். அப்போதய அமைச்சரவையில் ஊடகம் மற்றும் தகவல் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2000, 2001, 2004, 2015 ஆகிய ஆண்டுகளிலும் இவர் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

4. விஜேதாச ராஜபக்ஸ - நீதி, சிறைச்சாலைகள் , அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்

Ranil Wickremesinghe : ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள 9 அமைச்சர்களின் பின்னணி இதோ..

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த விஜேதாச ராஜபக்ஸ, 2004, 2010, 2015 ஆகிய கால கட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் கடந்த 2015 ஆம் ஆண்டில்   நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சராகவும்  செயல்பட்டார். 

5. ஹரீன் பெர்ணான்டோ - சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்

Ranil Wickremesinghe : ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள 9 அமைச்சர்களின் பின்னணி இதோ..

கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த பொத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து ஹரீன் பெர்ணாண்டோ முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். 2014 ஆம் ஆண்டில் ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த இவர்.  மாகாணசபைத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்று ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரானார். கடந்த 2015 ஆண்டு ஊவா மாகாணசபையில் ஐக்கிய தேசியக் கட்சி தனது பெரும்பான்மையை நிரூபித்ததை அடுத்து இவர் ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக ஆளுநர் நந்தா மெத்தியூவினால் நியமிக்கப்பட்டார்.  

6. ரமேஷ் பத்திரண- கைத்தொழில் அமைச்சர்

Ranil Wickremesinghe : ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள 9 அமைச்சர்களின் பின்னணி இதோ..

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த ரமேஷ் பத்திரண அடிப்படையில் ஒரு மருத்துவராவார். கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இவர் தற்போது முதன்முறையாக கைத் தொழில் அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார். 

7. மனுஷ நாணயக்கார - தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

Ranil Wickremesinghe : ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள 9 அமைச்சர்களின் பின்னணி இதோ..

ஊடகவியலாளரான மனுஷ நாணயக்கார, கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காலி தொகுதியில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வானவர். தற்போது தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். 

8. நலீன் பெர்ணான்டோ - வர்த்தகம் , உணவுப்பாதுகாப்பு அமைச்சர்

Ranil Wickremesinghe : ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள 9 அமைச்சர்களின் பின்னணி இதோ..

வர்த்தகம் மற்றும் உணவுப்பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நலீன் பெர்ணாண்டோ நார்த்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். விவசாய பொருட்கள் சந்தைப்படுத்ததல் அதிகார சபை, சிலோன் ஸ்டீல் கூட்டு ஸ்தாபனம், நெல் சந்தைப்படுத்துதல் சபை உள்ளிட்ட வணிக மற்றும் கூட்டுறவு அமைப்புகளில் இயக்குநராக பணியாற்றியவர். கடந்த 2018ஆம் ஆண்டு இவர் இலங்கையை விட்டு வெளியேற முயன்ற போது குற்ற புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டார். கடந்த 2020ஆம் ஆண்டு  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் கூட்டணி வேட்பாளராக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

9. டிரான் அலஸ் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

Ranil Wickremesinghe : ரணில் விக்கிரமசிங்கே அமைச்சரவையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள 9 அமைச்சர்களின் பின்னணி இதோ..

இலங்கை தொழிலதிபராகவும், அரசியல்வாதியாகவும் அறியப்படும் டிரான் அலஸ், மங்கள சமரவீர மற்றும் சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் மேடையில் செயற்பட்டவர். அவர் விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் முன்னாள் தலைவராக இருந்தார். கடந்த 2004-05 கால கட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சாவின் பிரச்சார முகமையாளராக அரசியலுக்கு வந்த இவர், ஏப்ரல் 2010 ஆம் ஆண்டில், ஜனநாயக தேசியக் கூட்டணியின் (டிஎன்ஏ) தலைவர் பதவியை வகித்த பிறகு, அவர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரானார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget