New Zealand MP Julie Anne Genter: ப்ளான் இல்லை.. ஆனால் நடந்துவிட்டது - பிரசவத்துக்கு சைக்கிளில் சென்ற நியூசிலாந்து எம்.பி.!
இந்தியா போன்ற நாடுகளில் கர்ப்பிணி பெண்கள் இதுபோன்ற முயற்சிகளை எடுப்பது பயனுள்ளதாக அமையாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்
நியூசிலாந்தின் பெண்கள் நலத்துறை மற்றும் போக்குவரத்து இணை அமைச்சராக இருந்த, ஜூலி அன்னி ஜென்டர் தன்னுடைய பிரசவத்துக்கு சைக்கிளிலேயே சென்ற நிகழ்வு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கிரீன் கட்சியின் மக்களவை உறுப்பினரான இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை போக்குவரத்து, பெண்கள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்.
Woohoo! I finally got an e-bike and cycled to work this morning. One of the things I loved about cycling in Beijing was feeling connected to the sights and smells and vibes of the city. I felt so connected to Poneke this morning (also the air quality is much better here ) pic.twitter.com/Jl7aE9p4rW
— Anna Fifield (@annafifield) November 24, 2021
இந்நிலையில், தன்னுடைய பிரசவத்துக்கு சைக்கிளிலேயே சென்ற நிகழ்வை ஆச்சரியத்துடனும், மகிழ்ச்சியுடனும் பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளார். தனது பதிவில், " அதிகாலை 3.04 மணியளவில் குடும்பத்தின் புதிய உறுப்பினரை வரவேற்றோம். உண்மையில் எனது பிரசவத்திற்கு சைக்கிள் செல்ல வேண்டும் என்று திட்டமிடவில்லை. ஆனால், இது நடந்தது.
அதிகாலை 2 மணிக்கு மருத்துவமனைக்கு கிளம்பும் போது, மிகவும் தீவிரமான பிரவச வலியைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், 2-3 நிமிட இடைவெளிக்குப் பிறகு சற்று உணர ஆரம்பித்தேன். மருத்துவமனை வந்தடைந்த 10 நிமிடங்களுக்குப் பிறகு வலியின் தீவிரம் அதிகரித்தது. மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான குழந்தை ஒன்று எங்களருகில் உறக்கம் கொண்டிருக்கிறது. அவளுடைய அப்பாவைப் போலவே. சிறந்த முறையில் கவனிப்பையும் ஆதரவையும் தந்து சிக்கலற்ற முறையில் பிரசவம் பார்த்த மருத்துவக் குழுவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
நியூசிலாந்து தொழிலாளிக் கட்சியின் தலைவர் மற்றும் அந்நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், ஜூலி அன்னி ஜென்டர் அங்கம் வகிக்கும் கிரீன் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைத்து வருகிறார்.
நியூசிலாந்து நவீன, வளமையான, வளர்ந்த சந்தைப் பொருளாதாரத்தை கொண்டுள்ளது. தனிநபர் கொள்வனவு ஆற்றல் சமநிலை அடிப்படையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏறதாழ US$28,250 ஆக உள்ளது. மருத்துவக் கட்டமைப்பு, நல்ல சாலை வசதி அனுபவம், மனித வளத்தைக் கொண்டிருக்கின்றன.
எனவே, இந்தியா போன்ற நாடுகளில் கர்ப்பிணி பெண்கள் இதுபோன்ற முயற்சிகளை எடுப்பது பயனுள்ளதாக அமையாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்