Nepal PM Wife Death: நேபாள பிரதமரின் மனைவி சீதா தஹால் மாரடைப்பால் காலமானார்...!
நேபாள பிரதமரின் மனைவி சீதா தஹால் மாரடைப்பால் காலமானார்.
Nepal PM Wife Death: நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹல் பிரசாந்தாவின் மனைவி சீதா தஹால் நீண்ட நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்த நிலையில், இன்று மாரடைப்பால் காலமானார்.
நேபாள பிரதமர் மனைவி காலமானார்
நேபாள நாட்டு பிரதமராக இருப்பவர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா. இவரது மனைவி சீதா தஹால். சீதா தஹாலுக்கு கடந்த சில நாட்களாக நடுக்கவாதம் அல்லது பார்கின்சன் (Parkinsons) எனும் அரிய வகை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நோயானது நரம்பு மண்டலத்தை சிதைக்கின்ற ஒரு நோய். மூளையில் Dopamnine என்கிற ரசாயன குறைபாட்டால் இது ஏற்படுகிறது. இந்த பார்கின்சன் நோயால் நேபாள பிரதமரின் மனைவி சீதா தஹால் கடந்த சில நாட்களாக அவமதிப்பட்டு வந்துள்ளார்.
Sita Dahal, wife of Nepal PM Pushpa Kamal Dahal 'Prachanda', passed away today after suffering a cardiac arrest following prolonged illness. pic.twitter.com/zqLL9FJTlN
— ANI (@ANI) July 12, 2023
இதற்காக பல்வேறு சிகிச்சைகளையும் மேற்கொண்டு வந்தார். நாளாக நாளாக இவரது உடல்நிலை மோசமாக இருந்து வந்தது. இந்நிலையில், காத்மண்டு நகரில் உள்ள நார்விச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை 8.33 மணியளவில் மாரடைப்பால் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலமான சீதா தஹாலுக்கு 69 வயதாகிறது என்று குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.