Watch Video: நடனமாடி போக்கு காண்பித்து மகனின் அழகிய ரியாக்ஷனை பதிவு செய்த தாய்! வைரல் வீடியோ
தன் தாயை வீடியோ பதிவு செய்வதாக நினைத்து தன்னையே குழந்தை வீடியோ எடுப்பதும், மாசு மருவற்ற அழகிய சிரிப்புடன் தன் தாயை குழந்தை பார்த்து ரசிப்பதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயம் ட்ரெண்டிங்கில் இருப்பதும் நெட்டிசன்கள் அதனை கூட்டம் கூட்டமாக செய்து மகிழ்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமீப காலமாக பெற்றோர் நடனமாடி தங்கள் குழந்தைகளை ஏமாற்றி அவர்களது முகபாவனைகளை வீடியோ பதிவு செய்யும் ட்ரெண்ட் ஹிட் அடித்து வருகிறது.
அந்த வகையில் தன் மகனை நடனமாடி ஏமாற்றி அவரது முகபாவனைகளை வீடியோ செய்து தாய் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
Madison Chavez எனும் பெண் தன் மகனின் இந்த க்யூட்டான வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தன் தாயை வீடியோ பதிவு செய்வதாக நினைத்து தன்னையே குழந்தை வீடியோ எடுப்பதும், மாசு மருவற்ற அழகிய சிரிப்புடன் தன் தாயை குழந்தை பார்த்து ரசிப்பதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
View this post on Instagram
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் லைக்ஸ்களுக்கு மேல் அள்ளி நெட்டிசன்களில் இதயங்களை கொள்ளை கொண்டு ஹிட் அடித்து வருகிறது.
இதே போல் முன்னதாக 2 வயதுக்கும் குறைவான குழந்தை ஒன்று தன் அம்மாவுக்கு கரண்டியில் தோசை எடுத்துவந்து அழகாகப் பரிமாறும் வீடியோ லைக்ஸ் அள்ளியது. தன் குட்டி ஆண் குழந்தை தோசையை பொறுமையாகக் கரண்டியில் எடுத்து வந்து தனக்கு பரிமாறும் இந்த வீடியோவை ”என் வருங்கால மருமகளே வெல்கம்” என்ற பின்னணி ஒலிக்கோர்ப்புடன் தாய் பூரிப்புடன் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
ஹது எனும் இன்ஸ்டா பயனரான இப்பெண் இதே போல் தன் மகளை தன் வருங்கால மருமகன் எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் எனும் குறிப்புடன் தன் மகளின் வீடியோவையும் பதிவிட்டுள்ளார். இவரது ரசனையான இந்தப் பதிவுகள் இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது.