மேலும் அறிய

குடும்பத்துல 7 பேர்.. வருஷத்துக்கு 2 முறைதான் ஷாப்பிங்.. சிக்கனம் கற்றுத்தரும் யூட்யூபர்!

காலை 10 மணிக்கு கடை திறந்ததும் உள்ளே செல்வோம், பிறகு சாயும்காலம் 4 மணியை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் எங்களது பர்சேஸ். கிட்டத்தட்ட இரவானதும் தான் வெளியில் வருவோம்.

கணவன் மனைவி உள்ள குடும்பத்தையோ, ஒரு குழந்தை இரு குழந்தை உள்ள குடும்பத்தையோ வரவு செலவு செய்து ஓட்டுவதே பெரும் காரியமாக இருக்கும் இந்த காலத்தில் ஒரு அம்மா 5 குழந்தைகள் கொண்ட 7 பேர் சேர்ந்த குடும்பத்தை சிக்கனமாக ஓட்டுவதற்கான வழியை குறிப்பிடுகிறார். யூட்யூபரும் குடும்பத்தலைவியுமான தபித்தா கெல்லி அவரது யூட்யூப் சேனலில் இதற்கான வழியை குறிப்பிட்டுள்ளார். இவர் அவரது குடும்பம் முழுவதற்கும் ஒரு வருடம் முழுக்க தேவைப்படும் பொருட்களை வருடத்தில் இரண்டே முறை கடைக்கு சென்று வாங்குவாராம். அதிலேயே அந்த வருடம் முழுவதும் ஏழு பேரும் உணவு உண்பதற்கு, வீட்டிற்கு தேவையான பொருட்கள் அடங்கி விடுவதாக கூறுகிறார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by YouTube Mama 💗 Tabitha Kelley (@this.mamas.house)

தபித்தா பேசுகையில், "நாங்கள் 5 குழந்தைகளை உள்ளடக்கிய 7 பேர் கொண்ட பெரிய குடும்பம். நான் சொல்லும் ட்ரிக் எங்கள் குடும்பத்துக்கும் எனக்கும் பொருந்துகிறது. அனைவருக்கும் பொருந்துமா என்று உறுதியாக கூறமுடியாது. நாங்கள் வாங்கும் பொருட்கள் 4 முதல் 6 மாதங்கள் வரை வரவேண்டும் என்பதற்காக நிறைய அளவிலான பொருட்கள் வாங்குகிறோம். என் தரப்பில் இருந்து உணவு திட்டமிடுதல், ஒருங்கினைத்தல் ஆகிய விஷயங்களுக்காக அதிக வேலைகள் செய்யவேண்டி உள்ளது. இதற்கான பர்சேஸை செய்யவே எங்களுக்கு ஒரு நாள் ஆகும். காலை 10 மணிக்கு கடை திறந்ததும் உள்ளே செல்வோம், பிறகு சாயும்காலம் 4 மணியை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் எங்களது பர்சேஸ். கிட்டத்தட்ட இரவானதும் தான் வெளியில் வருவோம். ஒரு முழு நாளை இதற்காக செலவு செய்தாலும் அதனை மிகவும் பயனுள்ளதாகத்தான் நான் பார்க்கிறேன். இதன் மூலம் எங்கள் அனைவருக்கும் எந்த தடையும் இன்றி சில மாதங்கள் உணவு கிடைத்துக்கொண்டே இருக்கிறது. நாங்கள் பெரும்பாலும் ரெஸ்டாரண்ட்டிற்கு செல்வதே இல்லை." என்று கூறுகிறார்.

அவர் பின்னர் அவரது சமையலறையை காண்பிக்கிறார். அது முழுவதும் நிறைந்து உள்ளது. அதில், உணவு பொருட்கள், வீடு சுத்தம் செய்யும் பொருட்கள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் என அனைத்தும் உள்ளது. அதில் 6 பெரிய ஆலிவ் எண்ணெய் பாட்டில்கள் உள்ளன. 10 டஜன் முட்டை, 20 பெட்டி வெண்ணெய், ஒரு வருடத்திற்கு தேவையான அரிசி, 22 பாக்கெட் பாஸ்தா, 95 பாக்கெட் சிப்ஸ் ஆகியவை இருந்தன. இத்தனை பொருட்களை எங்கு சேமித்து வைக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா. அவர்கள் பேஸ்மெண்டில் இதற்கென தனி அறை வைத்துள்ளனர். சில சமயங்களில் அங்கு இடம் பற்றாமல், சமையலறையிலும், வீட்டு ஹாலிலும் வைப்பதாகவும் கூறுகிறார். இருப்பினும் இன்னொரு கேள்வி எழுகிறது அல்லவா… இந்த உணவுப்பொருட்களுள் சில எக்ஸ்பயர் ஆகிவிட்டால் என்ன செய்வது? அதற்க்குத்தான் அத்தனை திட்டமிடல்களும், ஒரு நாள் ஷாப்பிங்கும் என்கிறார் தபித்தா.

தலைப்பு செய்திகள்

Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget