Mocha Cyclone : புரட்டி போட்ட மோக்கா புயல்... 81ஆக உயர்ந்த உயிரிழப்பு... மியான்மரில் சோகம்...!
மியான்மரில் மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 80 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோக்கா புயல்
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 13ஆம் தேதி புயலாக வலுவடைந்தது. மோக்கா என்று பெயரிடப்பட்ட இந்த புயலானது தீவிர புயலாக வலுவடைந்தது.
மத்திய வங்கக்கடலில் இருந்து படிப்படியாக அதிதீவிர புயலாக மாறி வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து கடந்த மே 14ஆம் தேதி தென்கிழக்கு வங்கதேசம் - வடக்கு மியான்மரி இடையே பிற்பகலில் மோக்க புயலில் கரையை கடந்தது. அதி தீவிர புயலாக மாறியுள்ள மோக்கா புயல் கரையை கடக்கும்போது 180-190 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. வங்கதேசத்தில் உள்ள கார்க்ஸ் பஜார் மற்றும் மியான்மரில் உள்ள கியாக்பியு இடையே நேற்று முன்தினம் பிற்பகலில் இந்த புயல் கரையை கடந்தது.
மியான்மரில் சோகம்
எதிர்பார்த்ததைவிட அதிகமாக தென்னை மரங்கள் வேரோடு பிடுங்கும் அளவிற்கு 210 கி.மீ வேகத்திற்கு காற்று வீசியது. மியான்மரின் சிட்வே பகுதியில் ஒரு செல்போன் கோபுரம் காற்றில் முறிந்து விழுந்தது. புயல் காரணமாக மின்சாரம், இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மியான்மிரின் பல இடங்களில் மோக்கா புயலால் பாதிப்பானது அதிகமாக ஏற்பட்டது. அதேபோன்று வங்களாதேச - மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளையும் சூறையாடியது. அதிலும் குறிப்பாக மோக்கா புயலால் வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் உள்ளிட்ட நகரங்களில் அதிகளவு பாதிக்கப்பட்டது.
உயிரிழப்பு
ஏற்கனவே புயல் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டதால் பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு தங்க வைக்கப்பட்டனர். இருப்பினும் பெரும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மியான்மரில் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல பொருட் சேதங்கள் அதிக அளவில் நிகழ்ந்திருக்கிறது.
Big scale devastation in #Sittwe , the capital city of #Rankine state
— Weatherman Shubham (@shubhamtorres09) May 14, 2023
Video = Kyaw Myo#Myanmar #CycloneMocha pic.twitter.com/MECCgzFn67
மியான்மர் ஏழை நாடு என்பதால் இங்குள்ள வீடுகளில் பெரும்பாலானவை கூரை வீடுகளாக இருக்கிறது. மோக்கா புயல் இந்த வீடுகளை வாரி சுருட்டி சென்றிருக்கிறது. மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காணவில்லை என்று தெரிகிறது. மியான்மர் மற்றும் பங்களாதேஷ் பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் அதிகமாக உள்ள வங்கதேசத்தில் உள்ள அகதிகள் முகாம்கள் இந்த மோக்கா புயல் கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த புயலால் அகதிகள் முகாம்கள் குறைந்த அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

