இது ஆச்சரியம்.. இரண்டுமே பெண் சுறா.. அப்றம் எப்படி பேபி சுறா? ஆய்வில் இறங்கிய ஆய்வாளர்கள்!
இத்தாலியில் பிறந்த குட்டி சுறா மீனின் டிஎன்ஏ வை எடுத்து ஊழியர்கள் சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
இத்தாலியின் சார்டினியாவில் உள்ள அக்வாரியோ காலா கோனோனில் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு பெண் சுறா மீன்கள் மட்டும் இருந்து வந்த நிலையில் புதிதாக பேபி சுறா பிறந்துள்ளது அனைவரும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இத்தாலியல் உள்ள the Acquario Cala Gonone ல் கடந்த 10 ஆண்டுகளாக இரண்டு பெண் சுறாக்கள் இருந்து வந்தன. இதற்கு அங்கு ஊழியர்கள் இஸ்பெரா என்று பெயரிட்டுள்ளனர். அங்குள்ள தொட்டியில் இரண்டு பெண் சுறாக்கள் மட்டுமே வளர்ந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஓரு குட்டி சுறா மீன் ஒன்று பிறந்துள்ளது. எப்படி ஒரு ஆண் மீன் இல்லாமல் பிறந்திருக்க கூடும் என்ற ஆச்சரியம் அதிகளவில் ஏற்பட்டது.
இதனையடுத்து தான் பிறந்த குட்டி சுறா மீனின் டிஎன்ஏ வை எடுத்து ஊழியர்கள் சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். மேலும் இந்த வகையான இனப்பெருக்கம் பார்த்தீனோஜெனெசிஸ் இனப்பெருக்கத்தின் (Parthenogenesis birth )விளைவாக என்று நம்பப்படுகிறது. பொதுவாக ஒரு விந்து மூலம் கருவுறாமல், ஒரு முட்டை கருவாக மாறும் பாலின இனப்பெருக்கம் என்று கூறப்படுகிறது. மேலும் இது குழந்தை சுறா அதன் தாயின் குளோன் என்றும் நிபுணர்கள் நம்புகிறார்கள். குறிப்பாக இந்த வகை இனப்பெருக்கும் முதிர்ச்சியடையாத முட்டைகளால் ஏற்படுகிறது. இவை கிட்டத்தட்ட விந்தணுவைப்போல செயல்படுகிறது.
பொதுவாக பார்த்தீனோஜெனசிஸ் என்பது அசாதாரண இனப்பெருக்கத்தின் கடைசி வடிவமாக உள்ளது. இந்த வகை இனப்பெருக்கும் பொதுவாக பல்லி போன்ற இனங்கள் பார்த்தீனோஜெனெடிக் பெண்களால் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. மேலும் முதுகெலும்பில்லாத புழுக்கள், பூச்சிகள் மற்றும் மீன்கள் போன்றவற்றில் இவை அரிதாகக் காணப்படுகிறது.
இந்த முறையில் தற்போது இத்தாலியில் உள்ள அக்வாரியோ காலா கோனோனில் பிறந்த குட்டி சுறா, ஓரினச்சேர்க்கையின் மூலம் இனப்பெருக்கம் செய்த முதல் பதிவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அதிசயமாக பிறந்துள்ள இந்த குட்டி சுறாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகிறது.