Video | ’ஒரு கிட்னிய கொடுத்தேன்’ இப்போ சட்னியாகிட்டேன்... டீச்சரின் காதல் தோல்வி புலம்பல் வீடியோ
அண்மையில் மார்ட்டினெஸ் தனது காதல் கதையைப் பற்றி டிக்டாக்கில் பகிர்ந்துகொள்ள அந்த வீடியோ தற்போது வைரல் ஹிட்டாகியுள்ளது.
நம் எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு பிரேக் அப் ஸ்டோரி நிச்சயம் இருக்கும். சோகத்தில் முடியாத லவ் இல்லாதவர்கள் வாழ்க்கையை வாழவே இல்லை என்றே சொல்லலாம். ஆனால் மெக்சிகோவை சேர்ந்த ஆசிரியர் உசியேல் மார்ட்டினெஸ் வாழ்க்கையில் சோகம் சற்று கூடுதலாகவே விளையாடிவிட்டது எனச் சொல்லலாம். அண்மையில் மார்ட்டினெஸ் தனது காதல் கதையைப் பற்றி டிக்டாக்கில் பகிர்ந்துகொள்ள அந்த வீடியோ தற்போது வைரல் ஹிட்டாகியுள்ளது.
தனது சோகத்தை மார்ட்டினெஸ் டிக்டாக்கில் தொடர் வீடியோவாகப் பகிரவும் அந்த சோகக் கதை பலரையும் பாதித்துள்ளது.அந்த வீடியோவில் தனது காதலியின் அம்மாவை தனது கிட்னியை கொடுத்து காப்பாற்றியது பற்றிப் பேசியுள்ள அவர், கிட்னி கூட தனது காதலைக் காப்பாற்றவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
Parte 3… Uziel Martínez confiesa que no grabó lo que le sucedió para obtener popularidad pic.twitter.com/DZlg1QHzAp
— Antonio Romero (@antonio_aioros) January 10, 2022
கிட்னி கொடுத்த ஒரே வாரத்தில் அவரது காதல் பிரேக் அப் ஆகியுள்ளது. ஒருமாதத்தில் வேறொரு நபருடன் திருமணம் நடந்துள்ளது. ’அவளது அம்மாவுக்காக எனது கிட்னியையே கொடுத்தேன்.ஆனால் அவள் என்னை விட்டுவிட்டு ஒரே மாதத்தில் வேறொரு நபரை திருமணம் செய்துகொண்டுவிட்டாள்’ எனக் கூறியுள்ளார்.
இதுவரை மார்ட்டினேஸின் இந்த வீடியோவை 14 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.
இதில் பல்வேறு கமெண்ட்கள் குவிந்தபடி உள்ளன, ‘இதனால் சோகமடையாதீர்கள். ஒரு ஜெண்டில்மேனை அவள் இழந்துவிட்டாள். வாழ்க்கையில் முன்னகர்ந்து கொண்டே இருங்கள்.உங்களுக்கான பெண் உங்களைத் தேடி வருவாள். உங்களை அவள் மெச்சுவாள்’ எனக் கூறியுள்ளார்.
இதற்கு பதில் பேசிப் பதிவிட்டுள்ள வீடியோவில், ‘என்னுடைய எக்ஸ் மீது எனக்கு எவ்வித ஆத்திரமும் இல்லை.நான் நலமாகவே உள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரே ஒரு கிட்னியுடன் தற்போது வாழ்ந்தாலும் தான் நலமாகவே இருப்பதாக மார்ட்டினேஸ் கூறியுள்ளார்.
தனது வீடியோ பிரபலமடைந்தது குறித்து பேசியுள்ள அவர்,‘எனக்கும் அவளுக்குமிடையே தற்போது ஒன்றுமில்லை. அவள் மீது வெறுப்போ எந்தவித உணர்வோ தற்போது இல்லை. நான் வெறுமனே டிக்டாக்குக்காக செய்தது இப்படி வைரலாகும் என நான் எதிர்பார்க்கவில்லை’ எனக் கூறியுள்ளார்.
’நமக்கு இரண்டு கிட்னிகள் உண்டு, அதில் ஒன்றைக் கொடுத்தால் மற்றொன்று நமக்கு இருக்கும்.ஆனால் அதனை நம்மால் உணர முடியாது. ஆனால் இதயம் அப்படியில்லையே’ என உணர்ச்சிகரமாக கூறியுள்ளார் அவர்.