மேலும் அறிய

'இந்திய ராணுவம் வெளியேற வேண்டும்' - மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற முகமது முய்சு மீண்டும் அதிரடி!

இந்தியப் படைகளை மாலத்தீவில் இருந்து வெளியேற்றுவேன் என முகமது முய்சு வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவைப் பேணி வந்த மாலத்தீவு அதிபர் முகமது சோலி, சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார். கடும் போட்டிக்கு மத்தியில் எதிர்க்கட்சி வேட்பாளரான முகமது முய்சு வெற்றி பெற்றார். 

மாலத்தீவு அதிபர் தேர்தலில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை தலைமை தாங்கி நடத்தியவர் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன். இவரது பிரச்சாரமே, 'இந்தியாவே வெளியேறு' என்ற முழக்கத்தை மையமாக வைத்து முன்னெடுக்கப்பட்டது. 

இந்தியப் படைகளை மாலத்தீவில் இருந்து வெளியேற்றுவேன் என முகமது முய்சு வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, இந்தியப் படைகளை வெளியேற்றுவேன் என அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதில் இருந்தே முகமது முய்சு வலியுறுத்தி வந்தார்.

மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற முகமது முய்சு மீண்டும் அதிரடி:

இந்த நிலையில், ப்ளூம்பெர்க் டிவிக்கு அவர் அளித்த நேர்காணலில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அப்போது, "முழு சுதந்திர நாடாக இருக்கவே மாலத்தீவு விரும்புகிறது. மாலத்தீவில் உள்ள இந்திய துருப்புக்களை வெளியேறச் சொல்வேன். இந்திய வெளிநாட்டு ராணுவம்தான் இங்கு உள்ளது. துருப்புக்கள், வேறு எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எனது எதிர்வினை ஒரே மாதிரியாகதான் இருக்கும்.

இந்திய அரசுடன் தனது இராணுவ இருப்பை அகற்றுவது குறித்து ஏற்கெனவே பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளேன். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்து வருகிறது. பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு உறவை நாங்கள் விரும்புகிறோம். இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக மற்ற நாடுகளின் படைகள் இங்கு கொண்டு வரப்படாது. 

சீனா அல்லது வேறு எந்த நாடும் தங்கள் ராணுவ வீரர்களை இங்கு கொண்டு வர அனுமதிக்க மாட்டேன். அனைத்து நாடுகளுடனும் நாங்கள் உதவி, ஒத்துழைப்பை விரும்புகிறோம்" என்றார்.

இந்திய படைகள் வெளியேற்றப்படுமா?

மாலத்தீவில் எவ்வளவு இந்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.  மாலத்தீவில் இந்திய ராணுவத்தை குவிப்பது தொடர்பாக இரு நாடுகள் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் ரகசியம் காக்கப்பட்டது பல்வேறு வதந்திகளுக்கு வழிவகுத்தது. அதேபோல, அதன் நோக்கம் குறித்து தொடர் கேள்வி எழுப்பப்பட்டு வந்துள்ளது.

மாலத்தீவுக்கு இரண்டு ஹெலிகாப்டர்களை இந்தியா நன்கொடையாக வழங்கியிருந்தது. இந்த ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவ வீரர்கள்தான் இயக்கி வந்தனர். அதேபோல, இயற்கை பேரிடரின்போது கடலில் சிக்கிய மக்களைக் காப்பாற்ற இந்திய ராணுவ வீரர்கள் பெரும் பங்காற்றினர். 

மாலத்தீவு அதிபர் தேர்தலில் தற்போது வெற்றிபெற்றுள்ள எதிர்க்கட்சி கூட்டணியான மக்கள் தேசிய காங்கிரஸ் - மாலத்தீவு முற்போக்கு கட்சி, சீனாவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தது. அப்துல்லா யாமீன் ஆட்சிக் காலத்தில், உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை மாலத்தீவு கடனாக பெற்றது. தேர்தலில் முய்சு வெற்றிபெற்றதால் சீனாவுக்கு மட்டும் இன்றி சீன முதலீட்டாளர்களுக்கும் இது மிகப் பெரிய வாய்ப்பை தரும் எனக் கூறப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Iran Announcement: ''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget