பெரிய சிலந்திக்களுடன் விளையாடி மகிழும் சிறுமி... வாயைப் பிளக்கும் நெட்டிசன்கள்!
டரண்டுலாக்கள் எனப்படும் அளவில் பெரிய சிலந்திக்கள் பொதுவாக அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகின்றன.
அமெரிக்க சிறுமி ஒருவர் டரண்டுலாக்கள் எனப்படும் பெரிய சிலந்திக்களை கைகளில் தூக்கி விளையாடியபடி சுற்றும் வீடியோ இணையவாசிகளை மயிர் கூச்செறிய வைக்கும் வகையில் உள்ளது.
அரக்னோஃபோபியா எனும் சிலந்தி பூச்சிகள் குறித்த அச்சம் கொண்டவர் என்றால் நீங்கள் இந்த வீடியோவைப் பார்க்காதீர்கள்.
View this post on Instagram
டரண்டுலாக்கள் எனப்படும் அளவில் பெரிய சிலந்திக்கள் பொதுவாக அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகின்றன.
பார்ப்பதற்கு அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும் டரண்டுலாக்கள் பொதுவாக விஷத்தன்மை கொண்ட பூச்சி அல்ல, ஆனால் இவை தங்கள் இரையை வேட்டையாடுவதற்காக கொடுக்களில் சிறிது விஷத்தை பொதுவாகக் கொண்டுள்ளன. இவை மனிதர்களுடன் பழகக்கூடியவை என்றும் கூறப்படுகிறது.
This Spider girl 🕷😱🕷 pic.twitter.com/ScYvfS1mK7
— Best Videos 🎥🔞 (@_BestVideos) August 18, 2022
இந்நிலையில் அமெரிக்க சிறுமி ஒருவர் டரண்டுலாக்களுடன் விளையாடும் இந்த வீடியோ, ட்விட்டரில்1.7 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ள ட்விட்டரில் ஹிட் அடித்து லைக்ஸ் அள்ளி வருகிறது.
View this post on Instagram
இதேபோல் முன்னதாக மிருகக்காட்சி சாலை காப்பாளர் ஒருவர் இதெபோல் டரண்டுலாக்களை வாயில் வைத்திருந்த வீடியோ இன்ஸ்டாவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.